Daily Archives: செப்ரெம்பர் 19th, 2014

ஐந்து நாட்கள்… 1,000 கேள்விகள்… அசராத ஜெயலலிதா!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புத் தேதியை குறிக்க… 17 வருடங்கள் உருண்டோடி இருக்கின்றன. சென்னை டு பெங்களூரு பயணத்தின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

8.1.1997 தேதியிட்ட ஜூ.வி இதழில் இருந்து சில பக்கங்கள் இங்கே…

Continue reading →

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்

பழங்கள் – இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையும் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:

எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித்து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி நலம் ஏற்படும்.

Continue reading →

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

‘மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்… நான் மெட்ரோவில் ஊரைச் சுத்தப் போறேன்!’- என இனி உற்சாக ஸ்டேட்டஸ் தட்டலாம்; ஓடும் மெட்ரோ ரயிலில் சாய்ந்துகொண்டு செல்ஃபி க்ளிக்கலாம்!

சென்னையின் பெருமித அடையாளமாக, மிகமிக விரைவில் பறக்கவிருக்கிறது மெட்ரோ ரயில். (ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் மெட்ரோவில் கேட்காது.) கொல்கத்தா, டெல்லி, பெங்களூருக்கு அடுத்து, இந்தியாவில் ஓடவிருக்கும் நான்காவது மெட்ரோ… சென்னை மெட்ரோ!

2014 டிசம்பர் மாதம் தன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் சென்னை மெட்ரோ, முதல் கட்டமாக மேம்பாலங்களில் மட்டும் இயக்கப்படும்; பின்னர் படிப்படியாகச் சுரங்கப்பாதைகளிலும் பறக்கும். சுமார் 14,600 கோடி பட்ஜெட்டில், சென்னை நகரின் உள்கட்டமைப்பையே ‘பட்டி – டிங்கரிங்’ பார்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றன மெட்ரோவுக்கான தடங்கள். 

Continue reading →

வாரிசுகள் நிம்மதியாக இருக்க… ஹோம் லோன் இன்ஷூரன்ஸ் எடுங்க!

பல நாள் கண்ட கனவின் விளைவாக வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு கட்டினார் பலராமன். இருபது ஆண்டு களுக்கு கடன் வாங்கி, எட்டு ஆண்டுகள்கூட கட்டி முடிக்கவில்லை. அதற்குள் அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. பலராமனின் வாரிசுகளால் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யைக் கட்ட முடியவில்லை. எனவே, வீட்டை விற்று கடன் தொகையைப் பெற்றது வங்கி. வீட்டுக் கடன் வாங்கியபோதே அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், இன்று அந்த வீடு பலராமனின் குடும்பத்திடமே இருந்திருக்கும். 

ஆனால், இன்றைக்கும் வீட்டுக் கடன் வாங்குகிறவர்களில் பலர் அதற்கேற்ப ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வீட்டுக் கடன் வாங்கும்போதே எடுக்கலாம்.

Continue reading →

சுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை…

சுக்ரன் – சூரியன்:

இந்தச் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலோ அல்லது இந்தச் சேர்க்கை உள்ள இடத்துக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்்பட்டிருந்தாலோ அசுப பலன்கள் நீங்கி, பெரிய மனிதர்களின் தொடர்பையும், செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் பெற்றிருப்பார்கள்.

மற்றபடி, இந்தச் சேர்க்கை அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்தச் சேர்க்கை கொண்ட ஜாதகர்கள், கலகம் செய்வதில் ஈடுபடுவர். தகாத குணமும் நடத்தையும் கொண்டவர்கள். பெண்களாக இருந்தால், கணவன் வீட்டாரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வர். பிறரை ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலிகள். ஒருவர் செய்த நன்மைகளை உடனுக்குடன் மறந்துவிடுவர்.

சுக்ரன் – சந்திரன்:

Continue reading →

அம்பாள் நிகழ்த்தும் அற்புதம்! தாலி பாக்கிய பீடம் வடக்குவாசல் அம்மன்!

தேனி மாவட்டத்தில், சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் சாலையை ஒட்டி, சுற்றிலும் வயல்கள் சூழ, ரம்மியமாக காட்சி தந்து, அருள்பாலிக்கிறாள் வனதுர்கை.

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு, நல்லுத்தேவன் பட்டி அருகே, இரு தரப்பு மக்களிடையே சண்டை சச்சரவுகள் இருந்து வந்தன. ஊரில் அமைதி நிலவ வேண்டி, ஊர்ப் பெரியவர்கள் சிலர் அம்மனை நோக்கி காட்டுப் பகுதியில் வேண்டினர். அதில் மகிழ்ந்த துர்கை, அவர்களுக்குள் இருந்த சண்டையை நீக்கி, சமாதானத்தை ஏற்படுத்தி அருளினாள். மேலும் வழக்கில் வெற்றி கிடைக்கச் செய்தாள். அன்று முதல், காவல்தெய்வமாகத் திகழ்கிறாள், வனதுர்கை!

அன்று, கண்டமனூர் ஜமீனின் ஆதிக்கத்தில் இருந்த நல்லுத்தேவன்பட்டி மக்கள், காவலுக்காக சின்னமனூருக்கு அனுப்பப்பட்டனர்.அங்கு தாங்கள் வழிபட்ட வனதுர்கைக்கு சின்னமனூரில் கோயில் எழுப்புவதற்காக, நல்லுத்தேவன்பட்டியிலிருந்து, பிடி மண் கொண்டு வந்து, கோயில் எழுப்பினார்களாம்!

இங்கே, திருமணம் ஆகாதவர்கள் ‘தாலி பாக்கியம்’ எனும் பீடத்தின் முன் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் விளக்கேற்றி வழிபட, திருமணத்தடை நீங்கும். அம்பாளின் முன்னே நின்று கொண்டு, ஏதேனும் காரியத்தை நினைத்துக் கொண்டு, கைகளை விலக்கி வைத்தபடி வணங்கும்போது,  ைககள் ஒன்றிணைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை!

நீண்ட காலம் இழுபறியாக உள்ள நீதிமன்ற வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு விரைவில் தீர்வைத் தந்தருள்வாளாம். அதுமட்டுமா? கல்வியில் ஞானம் கிடைக்கச் செய்யும் கருணை கொண்டவள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூழ் சமர்ப்பித்தும், புரட்டாசி நவராத்திரியில்  அன்னதானமிட்டும் வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்; செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக ஆராதனையை தரிசித்தால், தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இங்கு உள்ள காவல் தெய்வமான மாசானக் கருப்புசாமிக்கு கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இங்கு அம்மன் வடக்குத் திசையை நோக்கி அருள்வது, தனிச்சிறப்பு. மேலும் இங்கு சிவனாருக்கும் அவர் மைந்தன் முருகக் கடவுளுக்கும் சந்நிதி உள்ளது.