Daily Archives: செப்ரெம்பர் 20th, 2014

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு தி.மு.க. தூது!

பெங்களூரு வழக்கின் தீர்ப்பு நாள்

குறித்த பின்னணித் தகவல்களுடன் வந்தார் கழுகார்.

”ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் 28-ம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அறிவித்தார். தேதி அறிவித்து 15 நாட்கள் ஆகியும் ஜெயலலிதா தரப்பு பாதுகாப்பு கேட்கவில்லை. பெங்களூரு மாநகரக் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் நீதிபதி குன்ஹாவிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர். அவர் இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். நிறைய பேர் இந்த கோர்ட் வளாகத்துக்கு வந்து செல்வதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். அதனால் ஏற்கெனவே வந்த பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கே இந்த முறையும் மாற்றுவதோடு அவருக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார். அன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் அடுத்த நாள் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் குன்ஹா. 16-ம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடியதும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் வழக்கறிஞர் குமார்

Continue reading →

ஆரோக்கியமான வாழ்வுக்கு பாபா ராம்தேவின் 8 அட்டகாசமான யோகாசனங்கள்!!

aarokkiyamana vazhvukku baba ramthevin 8 attakasamana

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்து, அதில் தோல்வியடைந்தவர்களா? அல்லது நீளமான மற்றும் அழகான முடியை வளர்க்க ஆசைப்பட்டு, அது உங்களால் முடியாமல் போய்விட்டதா? இதற்கெல்லாம் ஒரு சரியான ஆயுதம் உள்ளது. ஆம், அது யோகா தான்! உங்கள் உடம்பில் தலை முதல் கால் வரை அத்தனை உறுப்புக்களும் தத்ரூபமாக இயங்கி, உடல் ஆரோக்கியத்துடனும் திகழ தவறாமல் யோகாசனம் செய்யுங்கள். யோகா என்றாலே, அதில் தலைசிறந்து விளங்கும் பாபா ராம்தேவ் தான் பெரும்பாலோனோருக்கு ஞாபகத்திற்கு வரும். யோகாவில் பெரும் புரட்சியையே படைத்தவர் ராம்தேவ். சருமத்தின் அழகை அதிகரிக்க.. யோகா குரு பாபா ராம்தேவ் கொடுக்கும் சில அழகு குறிப்புகள்!!! ராம்தேவின் யோகா முறைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை

Continue reading →

‘குட்டி குஷ்பு’ ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

'kutti kushbu' hanchikavin kgbidnas rakasiyam!!!

உடல் எடையை குறைக்க பலர் பலவிதங்களில் முயற்சிப்பார்கள். அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதில் மிகவும் குண்டாக பப்பளிமாஸ் போன்று இருந்து, திடீரென்று சிக்கென்று மாறியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் திரையுலகிற்கு புதிது அல்ல. சிறுவயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். பின் மடமடவென்று வளர்ந்து, தற்போது பிரபலமான நடிகையாகிவிட்டார். அப்படி அவர் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் தான் மாப்பிள்ளை, இந்த படத்தில் கொழுகொழுவென்று இருந்து, பின்

Continue reading →

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? ஆட்டோ கரெக்ட் பேக் அப்

வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை

Continue reading →

உணவு யுத்தம்!-36

பயணம் செய்கிறவர்கள் முந்தைய காலங்களில் தாங்களே கட்டுச்சோற்றை கையில் எடுத்துக்கொண்டு போவார்கள். ஒருமுறை புளியோதரை செய்து கொண்டு போனால் ஒருவாரம் வரை வைத்து சாப்பிடுவார்கள். இதுபோலத்தான் வடஇந்தியர்கள் தங்கள் பயணத்தில் ரொட்டியைச் சுட்டு, துணியில் மூடிவைத்து நாள்கணக்கில் சாப்பிடுவார்கள். இன்று பயணத்தில் உணவு கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குடும்பத்துடன் சுற்றுலா போகிற நாளில்தான் உணவை கையில் கொண்டு போகிறார்கள், அதுவும் ஒருவேளை உணவுதான்.

Continue reading →

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது.

ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334×750 (~326 pixels per inch) மற்றும் 1920×1080 (401 pixels per inch) திறனுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

Continue reading →

மலரட்டும் மனப்பூக்கள்!-செப்., 20 – புரட்டாசி முதல் சனி !

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, ‘ஏழுமலையானே… எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா…’ என்று ஏக்கம் கொள்வர்.
ஆனால், ஏழுமலையான் மேல் உண்மையான பக்தி இருந்தால், அந்த ஏக்கம் தேவையில்லை; அவனே தேடி வந்து அருள்வான் என்பதை விளக்கும் கதை இது.
பீமன் எனும் மண்பாண்டத் தொழிலாளி ஒருவர், புரட்டாசி சனி என்றில்லாமல், எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளை நினைத்து, விரதம் இருந்து வந்தார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால், நாள் முழுக்க வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால், அவரால், திருப்பதிக்கு போக முடியவில்லை. அதனால், வெங்கடா ஜலபதியின் சிலையை மண்ணிலேயே வடித்து, தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார். தினமும், மண்பாண்டங்கள் செய்து முடித்ததும், கையில் ஒட்டியிருக்கும் மண்ணை வழித்து, சிறு சிறு பூப்போல செய்து, அதை அந்த சிலைக்கு தூவுவார்.
இந்த சமயத்தில், மன்னன் தொண்டைமான், ஏழுமலையானுக்கு தங்கப்பூக்களை காணிக்கையாக வழங்கி, தினமும், அந்தப் பூக்களால் தான் பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டான். அதே போன்று, அர்ச்சகர்களும் தங்கப் பூக்களால் அர்ச்சனையை செய்தனர். ஆனால், மறுநாள் வேங்கடவனின் பாதத்தில் கிடந்ததோ மண்ணால் செய்யப்பட்ட பூக்கள். இது தினமும் தொடர்ந்ததால், இந்த விஷயத்தை அர்ச்சகர்கள், மன்னரிடம் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மனதில் குழப்பம் அடைந்தான்.
மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், ‘மன்னா… மனம் குழம்பாதே… என் பக்தன் பீமன் என்பவன் மண் பூக்களால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கும் பூக்களை நான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தான் அப்பூக்கள் அங்கே தென்படுகின்றன…’ என்றார்.
தன் எளிமையான பக்தியின் மூலம் கடவுளின் அருளைப் பெற்ற பீமனைத் தேடிச் சென்ற மன்னன், அவரிடம் நடந்ததைக் கூறினார். அவரோ, ‘அரசே… காலை முதல் மாலை வரை இந்த வண்டிச்சக்கரம் சுழன்றால் தான், என் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்; இதில், எனக்கு கோவிலுக்குப் போக நேரமேது! அதனால், மண்ணில் செய்த இந்த மண் பூக்களால், வேங்கடவனுக்கு அர்ச்சனை செய்வேன். சனிக்கிழமை விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பேன். ஆனால், இதற்காக, என் பூக்கள் பெருமாளின் காலடியில் வந்து விழுகிறது என்றால், அவனது கருணையை என்னவென்பேன்…’ என்று நெகிழ்ந்தார்.
பீமனின் வார்த்தையைக் கேட்ட மன்னன், அன்றிலிருந்து, திருப்பதி கோவிலில், சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ததுடன், புரட்டாசி பிரம்மோற்சவமும் நடத்த ஆணையிட்டான். அன்று முதல், இன்று வரை திருப்பதி திருமலையில் இந்த விழாக்கள் முக்கியமானவையாக உள்ளன.
திருப்பதி செல்பவர்கள், கை நிறைய காசு கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. உள்ளம் நிறைய பக்தியை சுமந்து சென்றால் போதும்; வேங்கடவனின் அருளைப் பெறலாம்.

திருப்பம் தரும் திருப்பதி விசேஷ தகவல்கள்

திருப்பதி வெங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள். இதோ உங்கள் பார்வைக்காக .

* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.

Continue reading →