மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அனைவருக்குமே மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருவது இயற்கையான ஒன்று. அப்படி தூக்கம் வந்தால், பலர் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால், நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட முடியும் என்பது தெரியுமா? பெரும்பாலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் கண்டிப்பாக மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவார்கள். அப்படி

தூங்குவதால் தான் அவர்களால் மாலையில் நன்கு வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்ய முடிகிறது. ஆனால் அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. எனவே அத்தகையவர்கள் மதிய வேளையில் முடிந்தால் ஒரு 10 நிமிடம் ஒரு குட்டித் தூக்கம் போட்டு பின் வேலை செய்யுங்கள். நிச்சயம் காலையில் சுறுசுறுப்புடன் இருந்ததை விட, மதியம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இப்போது மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!! தூக்கம் என்பது மூளைக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு செயலாகும். தூங்கி எழுந்த பின்னர், மூளையானது சுறுசுறுப்புடன் இருப்பதால், அப்போது எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்ய முடியும். அதனால் தான் காலையில் நம்மால் நிறைய வேலைகளை செய்ய முடிகிறது. அப்படி நிறைய வேலைகளை தொடர்ந்து செய்வதால், மூளையானது மீண்டும் சோர்வடைகிறது. எனவே மதிய வேளையில் 10 நிமிடம் குட்டி தூக்கம் போட்டால், மதியம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். காட்டில் வேட்டையாடும் விலங்குகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முக்கிய காரணம், அவை பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதால் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நாசாவில் உள்ள பைலட்டுகளிடம் இந்த சோதனையை மேற்கொண்ட போது, அதன் மூலம் குட்டித் தூக்கம் போடுவதால் 100 சதவீதம் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் நிறைய வேலைகளை செய்து, மூளை மற்றும் கண்களானது சோர்வடைந்திருக்கும். இதனால் நம்மை அறியாமலேயே மதிய வேளையில் தூக்கம் வரும். அப்படி மதிய வேளையில் உணவு உண்ட பின்னர், 10 நிமிடம் தூங்கி எழுந்தால், உடலானது இழந்த ஆற்றலை மீண்டும் பெற்று, உற்பத்தித் திறனானது அதிகரிக்கும். மூளை சோர்வாக இருந்தால், எந்த ஒரு ஐடியாவும் வராது. ஆகவே உங்களுக்கு எதற்கேனும் முடிவு அல்லது ஐடியா வேண்டுமானால், அப்போது சிறு தூக்கம் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் மூளையில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனமானது தெளிவடைந்து, நல்ல முடிவைப் பெற வழிவகுக்கும். தற்போதைய மார்டன் உலகில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மிகவும் அதிகம். இத்தகைய மன அழுத்தத்தில் இருந்து விடுதலைப் பெற சிறந்த வழி என்றால் அது தூக்கம் தான். எனவே காலையில் அதிக வேலைப்பளுவினால் மன அழுத்தத்தில் இருந்தால், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள். நிச்சயம் மனதில் உள்ள அழுத்தங்கள் நீங்கி, மனம் ரிலாக்ஸ் ஆகும்.

%d bloggers like this: