Daily Archives: செப்ரெம்பர் 23rd, 2014

செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்!!!

நீங்கள் ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் செக்ஸ் என்பது உங்கள் மனதில் முதல் விஷயமாக தோன்றாது. ஆனால் நீண்ட காலத்திற்கு அந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து தொடர்ந்து வரும் போது, நீங்கள் அதனால் உங்கள் செக்ஸ் வாழ்கையில் உண்டாகும் விளைவுகள் குறித்து யோசித்தே ஆக வேண்டும். சில நோய்கள் நாள்பட்ட நிலையில் உங்கள் செக்ஸ் வாழ்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கவே செய்கிறது. அந்த விதமான பொதுவான சில நோய்களின் பட்டியல் இதோ! மாதவிடாய்க்கு முன் மற்றும் பின்

Continue reading →

அமெரிக்காவின் பறக்கும் பூ!

மெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் அது. முன்னணி வீராங்கனைகள் பலர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பெண்ணைவிட மற்றொரு பெண்ணைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் அதிசயித்தனர். காரணம், அந்தப் பெண் ஓடியது, தனது எட்டு மாதக் கர்ப்பத்தோடு!

அந்தப் பெண், அலசியா மொன்டானா.  அமெரிக்காவின் அதிவேகப் பெண்மணி.

Continue reading →

5 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் மூலம் மானியம் 300 மாவட்டங்களில் முதல் கட்டமாக அமலாகிறது

புதுடெல்லி : ஆதார் எண் மூலம் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதன்மூலம், சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன்பிறகு ஆதார் அட்டையை எந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கும் கட்டாயமாக ஆக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. கட்டாயம் இல்லை என்றதால் இதை எடுப்பதற்கு மக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், பாஜ ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதோடு, ஆதார் மூலமான திட்டங்களை பாஜ செயல்படுத்தாது என்ற கருத்து கூறப்பட்டது.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!

கையூன்றி கரணம்!

நிமிர்ந்த முதுகெலும்பே மனித முன்னேற்றத்துக்கு மைல் கல்லாக இருந்தது.  நம் முதுகெலும்பின் நீளம் ஆண்களுக்கு 28 அங்குலம். பெண்களுக்கு 24 அங்குலம். முதுகெலும்பின் நீளம் ஆளுக்கு ஆள் அதிகம் வேறுபடுவது இல்லை. நம் உயரத்துக்குக் காரணம் கால் எலும்புகளின் நீளம்தான்.  அவற்றின் வித்தியாசமே சிலரை உயரமாகவும் சிலரை குள்ளமாகவும் காட்டுகின்றன. நான்கைந்துபேர் கும்பலாக உட்கார்ந்திருக்கும்போது இதைப் பார்க்கலாம். நாற்காலியில் அதிக வித்தியாசம் தெரியாமல் இருக்கிறவர்கள் எழுந்து கைகுலுக்கும் போது சிலருடைய  உயரமும் சிலரின் குள்ளமும் பளிச்சென்று தெரிகிறது.

அதனால்தான் குள்ளமானவர்கள் பெரும்பாலும் அமர்கிற தோற்றத்திலேயே புகைப் படங்களை வெளியிடுவார்கள். பரிணாமம் கைகளில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கை குறையும்போதே வளர்ச்சி பெற்றது. நிலம், நீர்  வாழும் பிராணிகளான தவளை போன்றவை மண்ணில் வசதியாய் இருக்க முன்னங்கால்கள் பிளவுபட்டன.  மென்மையாய் அந்தக் கால்கள் அமைந்தன. அடுத்தகட்டத்தில் இன்னும் அது அதிர்வுகளைத் தாங்குமளவு வளரவும்  குதிக்கவும் தாவவும், ஓடவும் தேவை ஏற்பட்டபோது விரல்களின் எண்ணிக்கை குறைந்து நகங்கள் வளரும் உறுப்புகளாக பூனைக்கிருப்பதைப்போல ஆயின. அடுத்தகட்டத்தில் குளம்புகளாக மாறியபோது அளவு விரிந்து வலுவாக மாறின.  காண்டாமிருகத்தின் மூன்று கால் விரல்களும், கால்நடைகள்,  மான்  போன்றவற்றில் இரண்டும்,  குதிரை போன்றவற்றில் ஒரே ஒரு சிறிய பிளவுபட்ட குளம்பும் காணப்படுகின்றன.

Continue reading →

விண்டோஸ் 8: டைல்ஸ் மாற்றம்

நம்மில் பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஏனென்றால், தற்போது கம்ப்யூட்டர் வாங்கும்போது, விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. மேலும், கம்ப்யூட்டரை அப்டேட் செய்தாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அப்டேட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல விஷயங்கள் புதியதாய்த் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது குறித்த புதிய பயனாளர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியதுள்ளது.

Continue reading →

குறட்டை தானேன்னு நினைக்காதீங்க… – செயல்திறனை பாதிக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு

சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:
1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?

Continue reading →