Daily Archives: செப்ரெம்பர் 24th, 2014

மிஸ்டர் கழுகு: வருமான வரி வலை!

கழுகார் வரும்போதே கத்தையாக ஆவ​ணங்களை எடுத்து​வந்தார். ”பெங்களூருவில் இருந்து​தான் வருகிறீரா?” என்று எடுத்துக் கொடுத்தோம். ‘ஆமாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டியபடி தொடங்கினார் கழுகார்.

”சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு 27-ம் தேதி அளிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க தொண்டர்கள் பெங்​களூருவுக்கு 26-ம் தேதி இரவே வந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். அதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் ரூம்கள் புக் ஆகிவிட்டன. இதையெல்லம் உளவுத் துறை மூலம் கண்காணித்த கர்நாடக காவல் துறை தமிழக காவல் துறை பாணியை கையாளப் போகிறதாம். அதாவது 25-ம் தேதியில் இருந்தே தமிழ்நாடு பதிவுகளில் வரும் வாடகை வாகனங்கள் பெங்களூருக்குள் நுழையத் தடை விதிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். கர்நாடக எல்லையிலேயே நிறுத்தி விடவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஏற்கெனவே கர்நாடக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டுவிட்டால் கர்நாடக அரசைக் குறை சொல்லி விடுவார். அதனால் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் கர்நாடக முதல்வர் சித்தராமையா. ஜெயலலிதா பாதுகாப்பு டீமுக்குத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பெங்களூரு குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை நியமித்துள்ளார்கள்!”

”அப்படியா?”

Continue reading →

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை

பெங்களூரு: இந்தியாவின் "பட்ஜெட்"விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.

திரவ இயந்திரம் இயக்கம்:
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading →

அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!

athikalaiyil tavirkka vendiya tavarana bazhakkangal!!!

பலர் காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது. மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இதுப்போன்று ஒருசில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள். நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மனநிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத்

Continue reading →

நேர்மை தப்பா அம்மா?

ஞ்சம் தவிர்த்து – நெஞ்சம் நிமிர்த்து!’ – சகாயத்தை ஓடஓட விரட்டிக்கொண்டு இருக்கிறது இந்த ஒரு வரி. கடந்த தி.மு.க ஆட்சியின்போது நாமக்கலில் இருந்து சகாயத்தை எந்த முழக்கம் விரட்டியதோ, அதுதான் இன்று அ.தி.மு.க ஆட்சியிலும் கைத்தறித் துறையில் இருந்து விரட்டி உள்ளது. அன்று தி.மு.க எம்.பி ஒருவர் காரணம் என்றால், இன்று அ.தி.மு.க மந்திரி ஒருவர் காரணம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதற்கு உதாரணம்… சகாயம்!

இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. முலாயம் சிங்கின் மகன் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், துர்காசக்தி நாக்பால் துன்பத்தை அனுபவிக்கிறார்; சோனியாவின் மருமகன் வதேராவின் ஊழல்களை அம்பலப்படுத்தியதால், ஹரியானாவில் அசோக் கேம்பா விரட்டப்படுகிறார்.

Continue reading →

விண்டோஸ் 8.1ல் தொடு உணர்திரை விலக்கல்

விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில், அதன் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்தி, மவுஸ் மற்றும் கீ போர்ட் வழியாக இயக்க விரும்புவார்கள். ஆனால், டச் ஸ்கிரீன் இயக்கத்தினை நிறுத்தி வைக்க, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எந்த விதமான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால், சில செயல்முறை வழிகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம்.
1. "Charm Menu” வினைத் திறந்து, "Device Manager” தேடவும். கிடைக்கவில்லை என்றால், தேடலுக்கான சொல்லை "Settings” என அமைக்கவும்.

Continue reading →

எல்லாத்துக்கும் டாக்டரா? கைவசம் இருக்குது வைத்தியம்

எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:
* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

Continue reading →