Daily Archives: செப்ரெம்பர் 25th, 2014

‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி

புதுடில்லி: ‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Continue reading →

மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் – செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

வண்ணப் புகைப்படங்கள்:

செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக விண்ணில் வெற்றி்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாயின் மேற்பரப்பை காட்டும் வகையிலான 5 போட்டோக்களை, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. இந்த படங்கள் தௌிவாக உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கள்யானின் படங்களை இஸ்ரோ பேஸ்புக் மூலம் வௌியிட்டுள்ளது.

 

மோடி பார்வையிட்டார்:

மங்கள்யான் வெற்றிகரமாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள செவ்வாய் கோள் புகைப்படங்களை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸவர ராவ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், பிரதமர் மோடியிடம் வழங்கினர். அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டினார்.

முதல் படம்:

செவ்வாய் கிரகத்தி்ன் மேல்பரப்பை மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. செவ்வாயின் மேற்பரப்பு குறித்த அறிவியல் ஆய்விற்கு தேவையான வகையில் படங்களை எடுக்கும் திறன் இந்த கேமராவிற்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கிட்டத்தட்ட 7300 கி.மீ., தொலைவில் இருந்து இந்த படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.

நலம் 360’ – 15

மூங்கில் தோள்களோ, தேன்குழல் விரல்களோ, மாவிலைப் பாதமோ, மங்கை நீ வேதமோ… ’ எனப் பாடிய கண்ணதாசன் முதல் ‘ஊதா கலரு ரிப்பன்…’ எனப் பாடிய இன்றைய கவிஞன் வரை பெண்ணழகைப் பாடாதோர் இல்லை. அழகு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற ஒரே முடிவில் எல்லோரும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆண் என்றாலே, ‘தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் ’ என வீரத்துக்கு அடையாளமாகத்தான் அவனது இறுக்கமான உடல் சுட்டப்படும். ஆனால், இன்றைக்கு ஆண் அழகைக் குறிவைத்து சந்தையில் குவியும் அழகு கிரீம்களைப் பார்த்தால்… அடேங்கப்பா!

Continue reading →

விநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இன்டர்நெட்

அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

Continue reading →

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது. இயற்கையான முறை என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை உண்ணுவது. இந்தக் கட்டுரையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் குறித்து கவனம் செலுத்தலாம் வாங்க. பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!

Continue reading →

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்… தவிர்ப்பது எப்படி?

மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

என்னென்ன ஆபத்துகள்?

Continue reading →

ஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் அளவே அதிகம் தான் – டைனிங் டேபிளில் உப்பு டப்பா வைக்காதீங்க…! ரத்த கொதிப்பு, கிட்னி, இதய பிரச்னை தேடி வரும்

உணவு வகைகளில், ‘டேஸ்ட்’ சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, ‘இப்ப நல்ல டேஸ்டா இருக்கே…’ என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!

Continue reading →

”10 ரூபாய் தினக்கூலி… பல கோடி ரூபாய் ஊழல்! ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி

ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க” என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

Continue reading →

நவராத்திரி – 9 நாட்கள்