Daily Archives: செப்ரெம்பர் 27th, 2014

ஜெ. பதவி இழந்தால் அடுத்த முதல்வர் யார்?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவி இழக்கும்பட்சத்தில் அடுத்த முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும், அதுகுறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில்  2 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகவே தகுதி இழப்பாகிவிடும் என்பதால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்துவிடுவார்.
கடந்த முறை ஜெயலலிதா, இதேப்போன்று நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு மிகக்குறைவுதான் என்று கூறப்படுகிறது. வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.  மேலும் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயரும் அடிபடுகிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்திலும் விவாதம்

Continue reading →

மிஸ்டர் கழுகு: பெங்களூரு பிரளயம்

பெங்களூரு பரபரப்பு காட்சிகளுக்​காகத்தான் கழுகாருக்கு காத்திருந்தோம். நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்தச் செய்திகளை அள்ளி வந்தார் கழுகார்!

”இந்த இதழை உமது வாசகர்கள் பரபரப்புடன் வாசிக்கத் தொடங்கி இருக்கும்போது பெங்களூரில் இருந்து செய்திகள் வர ஆரம்பித்து இருக்கும். அதற்கு முன்னதாக நடந்த பதைபதைப்பு க்ளைமாக்ஸ் காட்சிகளை உம்மிடம் விவரிக்கிறேன். வழக்கை 18 வருடம் இழுத்தடித்தாகிவிட்டது. தீர்ப்புத் தேதியை இழுத்தடிக்கும் வேலைகள் இறுதி வரைக்கும் எப்படி நடந்தது தெரியுமா?” என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

Continue reading →

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சில மணி நேரத்துக்குப் பின்னர், பிற்பகலில் ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டார்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக, நீதிமன்றம் அறிவித்தது. .

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ‘தி இந்து’விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.

அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. வழக்கு

குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா உத்தரவிட்டார்.

இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.

எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.

எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதம்:

ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், ‘ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு’ என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.

கூகுள் கூகுள் பண்ணிப் பாருங்கள்!

ணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசியத் தேவைகளின் வரிசையில் இன்று இன்டர்நெட்டையும் சேர்க்க வேண்டும் எனுமளவுக்கு இருக்கிறது இணையத்தின் அசுர வளர்ச்சி. அதில், இன்டர்நெட்டை முதன் முதலாகப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்களில் இருந்து, இன்டர்நெட் மூலமாக கோடிகளில் சம்பாதிப்பவர்கள் வரை அனைவரும் நாடுவது… கூகுள் சேவையை. விரிந்துகொண்டே போகும் அந்தச் சேவைகளின் பட்டியலும், பயன்பாடும் இங்கே..!

கூகுள் சேர்ச்… கம்ப்ளீட் சேர்ச்!

Continue reading →

உடனடி புக்மார்க்

இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்றுகிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.

Continue reading →

மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

mettabalisathai membaduthi udal edaiyai kuraikka sila

உங்கள் உடல் எவ்வளவு கலோரிகளை பயன்படுத்துகிறது என்பதையும் உண்ணும் போதும் உடற்பயிற்சி செய்யும் போது எவ்வளவு கலோரிகளை நீங்கள் எரிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். மெட்டபாலிசம் என்பது கார்போஹைட்ரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்புகளை உடைத்து, உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் செயல்முறையாகும். பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த

Continue reading →

உணவு யுத்தம்!-38

மருத நிலத்தில்,  உலக்கை​யால் தீட்டிய வெண்​ணெல் சோற்றினை, சுவையான நண்டுக்கறியுடன் பரிமாறியிருக்கிறார்கள். கைக்குத்தல் அரிசியால் சோறாக்கி வயல்களில் பிடித்த நண்டையும், பீர்க்கங்​காயையும் சேர்த்துச் சமைப்பார்கள், வரகரிசிச் சோற்றை, அவரைப் பருப்புடன் கலந்து உழவர்கள் உண்டு வந்தனர்.

இதுபோலவே குறிஞ்சி நிலத்தில் சிவப்பரிசிச் சோறும் உடும்புக் கறிப்  பொரியலும் உணவாக அளிக்கப்பட்டிருக்கின்றன. ‘வெந்தது வேவிறைச்சி’ என்றும், ‘சுட்டது சூட்டிறைச்சி’ எ ன்றும் வழங்கப்பட்டது.

முல்லை நிலமக்கள் வரகரிசிச் சோற்றுடன்,  பருப்பு கலந்து உண்டிருக்​கிறார்கள். தினை அரிசிச் சோறும் பாலும் சேர்த்த பால்சோற்றினையும் சாப்பிட்டிருக்கிறார்கள்.

Continue reading →