டிப்ஸ்… டிப்ஸ்-பாண்ட் டயலாக் பாக்ஸ்:

பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும். ஒரு சில சொற்கள் அல்லது

வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.
விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள் கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும். பின் பெர்சனலைஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Windows Color and Apperance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும்.
இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில்
Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.
பைலை மற்றவர்கள் மாற்றாமல் இருக்க: எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம். Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

%d bloggers like this: