Monthly Archives: ஒக்ரோபர், 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டது

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.41 மற்றும் ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வருகிறது.
நகரவாரியாக பெட்ரோல் விலைக்குறைப்பு விவரம்:
டெல்லியில் லிட்டர் ரூ.66.65 என்பது ரூ.2.41 குறைந்து லிட்டர் ரூ.64.24 ஆகிறது.
சென்னையில் லிட்டர் ரூ.69.59 என்பது ரூ.2.58 குறைந்து லிட்டர் ரூ.67.01 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது ரூ.2.53 குறைந்து லிட்டர் ரூ.71.68 ஆகிறது.
மும்பையில் ரூ.74.46 என்பது ரூ.2.49 குறைந்து ரூ.71.91 ஆகிறது.
டீசல் விலைக்குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் விலை ரூ.59.27 ஆக இருந்தது ரூ.2.43 குறைந்து ரூ.56.84 ஆகிறது.
டெல்லியில் ரூ.55.60 ஆக இருந்த விலை ரூ.2.25 குறைந்து ரூ.53.35 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.60.30 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.35 குறைந்து ரூ.57.95 ஆகிறது.
மும்பையில் ரூ.63.54ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்து ரூ.61.04 ஆகிறது.

மெட்ராஸ் ஐ தாக்கத்தில் இருந்து விரைவில் விடுபட சில வீட்டு வைத்தியங்கள்!!!

மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது. கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? இது ஆபத்தான ஒன்று இல்லையென்றாலும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தொந்தரவு தரக்கூடியது. முதலில் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இது மற்ற கண்ணிற்கும் பரவும். இதனை கட்டுப்படுத்த மக்கள் வீட்டு

Continue reading →

உலகின் மிகப்பெரிய அறிய அறிவியல் திட்டத்தில் இந்தியா பங்கேற்பு

ulakin mikapperiya ariya ariviyal tittathil inthiya

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா : தெற்கு பிரான்சிஸில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்து உலகின் முதல் அணு உலையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உயர்மட்ட விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த இரும்பு கொப்பரையை (steel cauldron) உருவாக்கி அணுக்களை இணைப்பதன் மூலம் சுத்தமான அணு ஆற்றலை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர். இந்த உலகின் மிகப்பெரிய அறிவியல் திட்டம் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த அறிவியல் திட்டத்தின் உலை 23,000 டன்களை கொண்டது, அதாவது மூன்று ஈபிள் கோபுரங்களை போன்ற அளவுடையது. இதில் சுமார் 80,000 கிலோமீட்டர்களுக்கு ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Continue reading →

ப்ளாடா பிந்தி வைரஸ் எச்சரிக்கை

டிஜிட்டல் வெளியில், இணைய தளங்களில், குறிப்பாக இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) என்னும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால பாதுகாப்பு மையம் (Computer Emergency Response Team-India (CERT-In) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களையே பாதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கம்ப்யூட்டரை இது பாதிக்கின்றதோ, அதில் உள்ள தனி நபர் தகவல்களைத் திருடி, திருட்டு நடவடிக்கைகளுக்காகப் பலருக்கு அனுப்புகிறது.

Continue reading →

தோல் சுருக்கம் நீங்க வேண்டுமா?

தோலின் நெகிழ்வுத் தன்மை குறைவாலும், உலர்ந்து போவதாலும், சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயதானவர்கள், வெயிலில் அலைபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
உணவே மருந்து:
தோல் மென்மையாக, சுருக்கங்கள் இன்றி இருப்பதற்கு, தினசரி, 500 மி.கி., வைட்டமின் ‘சி’ தேவை. இதற்கு, வைட்டமின்-சி, ஏ, நிறைந்த, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளி பழத்தை, தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட் அல்லது ஏதாவது ஒரு பழ ஜூசை பருக வேண்டும். தோல் வறண்டு போகாமல் இருக்க, தினமும், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

Continue reading →

திராட்சை தோட்டத்து கணக்கு… வழக்கு! குன்ஹா தீர்ப்பு விவரம் – 8

ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்ட வருவாய் பற்றி நீதிபதி குன்ஹா தெரிவித்த கருத்துகள் இவை:

”1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்பது அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகப் பல ஆவணங்களை அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன்னிடம் இருக்கும் சொத்துகள் தனக்கு முறையான வருமானங்கள் மூலம் சேர்ந்தவை என்று பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் அவர் ஆந்திர மாநிலம், ஹைதராபாத், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜே.டி.மெட்லா திராட்சைத் தோட்டத்தில் இருந்து தனக்கு 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது என்று குறிப்பிடுகிறார். இதை மறுக்கும் அரசுத் தரப்பு, திராட்சைத் தோட்டத்தில் இருந்து, ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் கிடைத்த மொத்த வருமானம் வெறும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் மட்டுமே என்று ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அரசுத் தரப்பின் இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்க அவர்கள் சார்பில் மூன்று சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உள்ளனர்.

Continue reading →

பணியிடத்தில் தேவை… படிப்படியான முன்னேற்றம்!

கங்காதர் அப்படி ஓர் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்த மூன்று வருடத்தில் டாப் போஸ்ட்டை அடைந்து விட்டார். குறுகிய காலத்தில் ஒரே தாவலில் பெரிய பதவியில் போய் உட்கார்ந்ததை நினைத்து அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

ஆனால், அந்த மகிழ்ச்சி சில வாரம்கூட நிலைக்கவில்லை. டாப் பதவிக்கான பொறுப்பு மிக அதிகமாக இருந்தது. அத்தனைப் பொறுப்புகளையும் நல்லபடியாக செய்து முடிக்க, அவர் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. சில வாரங்களுக்குள் ஏன்தான் இந்தப் பதவிக்கு வந்தோமோ என்று நினைத்து வருந்தத் தொடங்கினார். ஒரு வேலையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று வந்திருந்தால், எல்லா வேலைகளிலும் உள்ள நெளிவுசுளிவுகளை தெரிந்துகொண்டு வந்திருக்கலாம். அப்போது தனக்கு அனுபவமும் மன தைரியமும்  கிடைத்திருக்குமே என்று நினைத்தார்.

வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களில் இருக்கும் ஒவ்வொரு நிலையிலும் எப்படி தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும், அந்தந்த நிலைகளில் ஒரு பணியாளர் என்ன செய்ய வேண்டும் என எம்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக…

Continue reading →

பா.ஜ.க. பாசவலை… நழுவி ஓடும் ரஜினி..!

‘பாட்ஷா’வை தி.மு.க-வும், ‘அண்ணாமலை’யை அ.தி.மு.க-வும், ‘பாபா’வை பா.ம.க-வும் ஓட்டியதைப்போல ‘லிங்கா’ படத்தை ஓட்ட இதோ வந்துவிட்டது பா.ஜ.க. இந்தப் படத்துக்கான செலவு இல்லாத பி.ஆர்.ஓ-வாக வேலைபார்க்கிறார் பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, ரஜினியை காங்கிரஸுக்குள் இழுக்கும் படலம் தொடங்கியது. அன்றைய பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருமான நரசிம்மராவை டெல்லிக்கே சென்று சந்தித்தார் ரஜினி. விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமான ராவ் – ரஜினி சந்திப்பில் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ‘நீங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் வந்துவிடுங்கள்’ என ராவ் விடுத்த அழைப்பை, ரஜினி ஏற்கவில்லை. இதோ, 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, ரஜினியை பா.ஜ.க-வில் சேரும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். காட்சி மாறவில்லை; கட்சிதான் மாறி இருக்கிறது.

அன்று ராவ், ரஜினியை டெல்லிக்கு வரவழைத்துப் பேசினார். இன்று மோடி, ரஜினி வீட்டுக்கே வந்து பேசினார். பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். வழக்கம்போல் ரஜினி மௌனமாக இருக்கிறார்.

Continue reading →

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.
ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: Continue reading →

வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்

ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.

Continue reading →