காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்

தேவையானவை: முட்டைகோஸ்-100 கிராம், வெள்ளரிக்காய் – 2, குடமிளகாய் – 1, தக்காளி – 3, ஸ்ட்ராபெர்ரி – 5, ஆப்பிள் – 1, திராட்சை – 100 கிராம்

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாகவும், வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.   முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கிச் சாப்பிடலாம். தேவை எனில், சுவைக்காக எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சிறிது சேர்த்தும் சாப்பிடலாம்.

பலன்கள்:

காய்கறி, பழங்களை அரைக்காமல், மிகச் சிறிய துண்டுகளாக சாப்பிடுவதால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். நார்ச்சத்து, செரிமானக் குறைபாட்டை நீக்குகிறது. மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.

பச்சைக்காய்கறி, பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. தொடர்ந்து இந்த சாலட் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

தக்காளி, ஆப்பிள், முட்டைகோஸ் என அனைத்திலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. நீரில் கரையும் வைட்டமின் என்பதால், இந்த காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடும்போது, வைட்டமின் சி முழுமையாகக் கிடைக்கிறது.

ஒவ்வொரு காய்கறி, பழத்திலும், வைட்டமின் ஏ, பி, இ, கே மற்றும் தாதுஉப்புக்கள் என ஒவ்வொரு விதமான சத்து அதிகமாக உள்ளது. இவற்றை சாலடாகச் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த சத்துக்களும்  கிடைத்துவிடும்.

இவற்றின் கிளைசெமிக் குறியீடு குறைவு என்பதால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. சருமம் பொலிவு பெறுகிறது. அனைவருமே சாப்பிடலாம். சில காய்கறிகள் பிடிக்காதவர்கள் தங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

%d bloggers like this: