Monthly Archives: ஜனவரி, 2016

ஆன்லைன் மூலம் என்பிஎஸ்… இனி ஈஸியா முதலீடு செய்யலாம்!

ன்றைய தேதிக்கு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பென்ஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) எனப்படும் ஒய்வுக் காலத் திட்டம்தான். இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் நேரடியாக மட்டும் முதலீடு செய்யும்படி இருந்தது. இப்போது அது ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்கிற மாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  

Continue reading →

குரோம் எக்ஸ்டன்ஷன்கள் எடுத்துக் கொள்ளும் இடம்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.

Continue reading →

சுகமான தூக்கத்துக்கு…

தினசரி வாழ்க்கையில் திடீரென அவ்வப்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, முதுகுவலி, கைவலி, போன்றவற்றுக்குக் காரணம் சரியான உறங்கும் முறைகளைக் கடைப்பிடிக்காததாலும் இருக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தில் இந்த முறைகளைக் கடைப்பிடிப்பது சற்று கடினம்தான் என்றாலும், உறக்க நிலைக்குச் செல்லும் வரை இவற்றை முயற்சி செய்வதன் மூலம், தினசரி ஏற்படும் வலிகளைத் தவிர்க்கலாம். மிதமான, மென்மையான தலையணைகளைப் பயன்படுத்துவது நல்லது. இரு தலையணைகளுக்கு மேல் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்.

நேராகப் படுப்பது

Continue reading →

ஆயில் அரசியல்!

‘அஞ்சு கோடிப் பேர்கிட்ட அஞ்சு அஞ்சு பைசாவா திருடறது தப்பா?’ என்ற ‘அந்நியன்’ படத்தின் டயலாக் எதற்குப் பொருந்து கிறதோ இல்லையோ, இந்தியாவில் நடக்கும் ஆயில் அரசியலுக்கு ரொம்பவே பொருந்தும். கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து விட்டாலும், அந்தச் சரிவின் பலன் சாமானிய மக்களுக்கு இதுவரை வந்துசேரவில்லை.

Continue reading →

பிறந்தது அமெரிக்கா, படித்தது பகவத்கீதை, பரப்புவது காந்தியம்!

காந்தியம்

ந்தியாவில் காந்தி கிட்டத்தட்ட வரலாற்றுப் புத்தகப்பக்கங்களில் மடித்துவைக்கப் பட்டிருக்கும் நிலையில், அமெரிக் காவைச் சேர்ந்த பெண் ஒருவர் காந்தியின் கொள்கைகளை அமெரிக்க மக்களிடத்தில் பரப்புவதில் பெரும்பங்காற்றி வருகிறார்.

Continue reading →

ராங் கால் -நக்கீரன் 29.1.2016

ராங் கால் -நக்கீரன் 29.1.2016

Continue reading →

அடுக்குமாடிக் குடியிருப்பு: கட்டாயம் கவனிக்க வேண்டிய கார்பெட் ஏரியா!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுந்தர் என்பவர் மூன்று ஆண்டுகளுக்குமுன் கூடுவாஞ்சேரியில் அடுக்குமாடி திட்டம் ஒன்றில் 1,310 சதுர அடி ஃப்ளாட்-ஐ முன்பதிவு செய்தார். கடந்த மாதம் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு, அவரிடம் சாவி கொடுக்கப்பட்டது. வீட்டின் மொத்த சதுர அடியை அளந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி. ஃப்ளாட்டில் புழங்கும் பகுதி 900 சதுர அடியாகத்தான் இருந்தது. ரியல் எஸ்டேட் புரமோட்டருக்கு போன் செய்தார். தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரைக்

Continue reading →

மறைக்கப்படும் பைல்கள்

நம் கம்ப்யூட்டர்களில், போல்டர்களில், சில பைல்கள் மறைக்கப்பட்டே கிடைக்கின்றன. நாம் யாரும் இவற்றைப் பார்ப்பது இல்லை. நம் பைல் மேனேஜரில், இந்த மறைக்கப்பட்ட பைல்களைக் (Hidden Files) காட்டும்படி செட் செய்தால், ஒவ்வொரு போல்டரிலும் சில பைல்களைக் காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் thumbs.db மற்றும் desktop.ini என்னும் பைல்களை உருவாக்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் .DS_Store என்னும் பைல்களை உருவாக்கித் தருகிறது.

Continue reading →

உணவால் பரவும் நோய்கள் உஷார்!

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண் நிஷா. ஹெல்த் விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். ஃப்ரெஷ் ஜூஸ், பழ- காய்கறி சாலட், முளைவிட்ட தானியங்கள் இவைதான் அவர் உணவில் பிரதானமாக இருக்கும். என்னதான் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தினாலும், அடிக்கடி அவருக்குத் தலைவலி வந்தது. நாளடைவில், வாந்தி, மனக்குழப்பம், அவ்வப்போது மயங்கிவிழுவது, மயங்கியநிலையில் உளறுவது போன்ற பிரச்னைகள் இருந்தன. டாக்டரைப் பார்த்து மருந்துகள் பல எடுத்தும், பிரச்னை

Continue reading →

கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் பெயர் காரணம்!

ஒருசமயம், பார்வதி தேவிக்கு, ‘சிவாய நம’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை, உரைத்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அவ்விடத்திற்கு மயில் ஒன்று வர, பாடத்தை கவனியாமல், அதை வேடிக்கை பார்த்தாள் பார்வதி. சிவனுக்கு கோபம் வந்து, ‘பாடம் நடக்கும் போது மயிலின் மீது நாட்டம் சென்றதால், நீ பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாயாக…’ என சாபமிட்டார்.
பதறிப் போன பார்வதி, சாப விமோசனம் கேட்ட போது, ‘உத்ராயண காலம், புஷ்ப நட்சத்திரத்தில், சாப விமோசனம் தருவேன்…’ என்றார். மயில் வடிவமெடுத்து பூலோகம் வந்தாள் அம்பிகை; அவளுடன், தேவர்களும் மயிலுருவில் வந்தனர்.
மயில் உருவத்திலேயே சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வந்தாள் அம்பிகை. சாப காலம் முடிந்ததும், தைப்பூசத்தன்று, அவளுக்கு சுய உருவை கொடுத்து, ‘கற்பகாம்பாள்’ என பெயர் சூட்டினார் சிவன். அவர்கள் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர்.
சிவன் கபாலத்தை கையில் வைத்திருப்பவர் என்பதால், அங்கு எழுந்தருளிய கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவில் என பெயர் வைக்கப்பட்டது. இத்தலத்தில், தை பூச விழா, மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.