‘ஆதார்’ இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்
சென்னை: ”ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,” என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் கூறினார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தி.மு.க.,வினர் கடுப்பு: சில நாட்களுக்கு ‘தண்ணி’ காட்டும்படி கருணாநிதி ரகசிய உத்தரவு
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு ‘தண்ணி’ காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து
புற்றுநோய் இல்லாத உலகம் படைப்போம் இன்று உலக புற்றுநோய் தினம்
நமது நாட்டில் பெண்களுக்கு உண்டாகும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் இரண்டாவது இடம் வகிக்கிறது. உலக அளவில் இது முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கூட நகர் பகுதிகளில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. எனவே மார்பக புற்றுநோய் குறித்து நாம் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம் இது. இந்நோயின் வளர்ச்சி வெவ்வேறு நோயாளிகளுக்கு வெவ்வேறு விதமாக அமையும். இக்கட்டி இரட்டிப்பாக, 23 நாட்கள் முதல் 207 நாட்கள் வரை ஆகின்றது. முற்றிய நிலையை கட்டிகள் அடைய 500 நாட்களாகின்றன.
என்ன காரணம்?
அன்னப்பிளவு
1 அன்னப்பிளவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்
ஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.
2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன? Continue reading →
மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை!
வெப்பப் பிரதேசங்களில் புதர்ச் செடிபோல வளரக்கூடியது துத்திக்கீரை. இதன் கீரை மட்டும் அல்ல, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
துத்திக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, கடைந்து சாப்பிடலாம்; துவையலாகவும் செய்து சாப்பிடலாம். உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.
ஸ்கிரீன் டிப்ஸ் வேண்டாமா!:
ஸ்கிரீன் டிப்ஸ் வேண்டாமா!: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமிலும், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல்
எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!
கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஆனந்த். எல்லா விஷயங்களிலும் சக நண்பர்களைப் போல இயல்பாக இருந்தாலும் வெளியே சொல்ல முடியாமல் ஒரு பிரச்னை உள்ளுக்குள் வளரத் தொடங்கியது. நன்றாகவே தேர்வு எழுதி இருந்தாலும்கூட, `நாம் ஃபெயில் ஆகிவிடுவோமா’ என ஒரே மாதிரியான எண்ணங்கள் திரும்பத் திரும்பத் தோன்றி அவரைப் பயமுறுத்தியது. தலைவலி வந்தால் கூட, `மூளையில் கட்டி வந்திருக்குமோ, தலைவலி இதன் அறிகுறியோ?’ எனத் தேவை இல்லாமல் பயந்து, பதற்றத்துடனே வாழும் நிலைக்கு ஆளானார். நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க, தனக்கு மட்டும் எப்போதும் பிரச்னைகள் வந்துகொண்டிருக்கிறதே என நினைத்து எப்போதும் விரக்தியுடனே காணப்பட்டார். முயற்சி செய்தும் இப்படி, நெகட்டிவாக யோசிப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
நம்மால் முடியும்! என்னால் முடியும்!
பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம்
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
புற்றுநோய் என்பது என்ன?
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்!
பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்
நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே, ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.
தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன் பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து, 17 கி.மீ., தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இங்கே ரதசப்தமி விழா, பிப்.,5ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.
ஒரு சமயம், காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய, நவக்கிரகங்களை வழிபட்டார்; அவரை குணமாக்கின கிரகங்கள். இதையறிந்து, கோபமடைந்த பிரம்மா, ‘உங்கள் பணி, அவரவர் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன் வழங்குவதே! முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை அடையவே, காலவ முனிவருக்கு தொழுநோயைக் கொடுத்தேன். அதை, அவரை அனுபவிக்க விடாமல் தடுத்ததால், நீங்கள் பூமியில் பிறப்பெடுத்து, அந்நோயின் வேதனையை அனுபவியுங்கள்…’ என்று சாபமிட்டார்.
இதனால், பூலோகம் வந்த கிரகங்கள், சிவனை நோக்கி, தவமிருந்தன. சிவனும், அவர்களுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், அவ்விடத்திலேயே அவர்கள் கோவில் கொள்ள ஆசியளித்தார். அதுவே, சூரியனார் கோவில்!
தங்களை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கள் தாங்கி, அவர்களுக்கு அருள் செய்கின்றன இங்குள்ள கிரகங்கள்.
தமிழகத்தில், நவக்கிரகங்களுக்கு என்று அமைந்த ஒரே கோவிலான இது, சூரியனார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், எல்லா கிரகங்களுக்கும், இங்கு சன்னிதி உண்டு. கருவறையில், சிவசூரியன் எனும் சூரிய பகவான், தன் துணைவியரான உஷா தேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்கு உக்கிரம் அதிகம் என்பதால், அதைக் குறைக்க, சன்னிதி எதிரே, குரு பகவானை ஸ்தாபித்துள்ளனர்.
கருவறையை சுற்றி, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன், புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது சன்னிதிகள் உள்ளன. இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
இங்கு ரதசப்தமி திருவிழா, பிப்., 5ல் துவங்கி, ரதசப்தமி தினமான, 14ம் தேதி நிறைவு பெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்று, சிவசூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு என்பதால், அன்று, ஏராளமான பக்தர்கள் வருவர்.
ஜாதக ரீதியாக சூரியனின் இருப்பிடம் சரியில்லாதோரும், சூரிய திசையால் பாதிக்கப் படுவோரும் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம், செந்தாமரை மலர் சாத்துவர். எல்லா கிரகங்களுமே இங்கு உள்ளதால், அந்தந்த கிரக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
மனிதனாகப் பிறந்து விட்டால், கஷ்டம் நிச்சயம். இதற்கு ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், அசுரர், முனிவர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. நம் பாவ, புண்ணியத்தை கழிக்கவே, பூமியில் பிறந்துள்ளோம். நமக்கு வரும் கஷ்டங்கள், நம் விதிப்பயனால் வருபவை. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அவற்றை தாங்கும் சக்தியை தரவும், அந்த கஷ்டங்கள் மூலம், ‘அனுபவம்’ என்னும் கற்கண்டை பெறவும் ரதசப்தமி நன்னாளில் நவக்கிரகங்களை வேண்டிக் கொள்வோம்!