பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.!!

தற்பொழுது வரும் பல ஸ்மார்ட்போன்கள் பல வித செயல்களை புரிவதில் திறன் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால் பிரச்சனை என்னவென்றால் பேட்டரி அடிக்கடி செயல் இழந்து போவதுதான். இத்தனை செயல்களையும் உங்கள் ஆண்ட்ராய்ட் போன் புரிய வேண்டுமென்றால் அதன் பேட்டரி நல்ல முறையில் இருத்தல் அவசியம்.

அடிக்கடி சார்ஜ் போகும் பேட்டரியால் போனுக்கும் ஆபத்து இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். நம் அவசர காலத்தில் போனை எடுக்கும் போது சார்ஜ் இல்லையென்றால் எவ்வளவு பிரச்சனை என்று உங்களுக்கே தெரியும்.

சில நேரங்களில் ஆண்ட்ராய்ட் போன்களின் பேட்டரி சார்ஜ் எடுத்து கொள்ள பல நேரம் பிடிக்கின்றது. இதை தீர்பதற்கென்றே பல செயலிகள் வந்துள்ளன.

அவற்றை பற்றி இங்கு காண்போம்.

Juice Defender

ஜூஸ் டிஃபென்டர்

ஆண்ட்ராய்ட் போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க என்றே தயாரிக்கப்பட்ட செயலி தான் இந்த ஜூஸ் டிஃபென்டர். இதில் அறிபூர்வமான செயல்திறன்கள் உள்ளன. பேட்டரியை செயல் இழக்க செய்யும் 3ஜி / 4ஜி, வைபை போன்றவற்றை அவ்வபோது சரிபார்த்து பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதில் இந்த செயலி கில்லாடிதான். இந்த செயலியின் உதிவியோடு மொபைலின் தரவுகள் சரிபார்க்கவும், வைபை மற்றும் சிபியுவின் வேகத்தை கூட்டவும், சில குறிப்பிட்ட செயலியை செயல் படுத்தவும், செயல் இழக்க செய்யவும் என பல செயல்களை செய்கின்றது.

Greenify

கிரீனிஃபை

ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீடிக்க கிரீனிஃபை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இது உங்கள் போனின் செயலிகளை நீங்கள் பயன்படுத்தாத போது கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. இதனால் உங்கள் போன் அடிக்கடி செயல் இழந்து போகாமலும் பேட்டரி அடிக்கடி குறைந்து போகாமலும் இருக்கும்.

Go Battery saver and power widget

கோ பேட்டரி சேவர் மற்றும் பவர் விட்ஜெட்

கோ பேட்டரி சேவர் மற்றும் பவர் விட்ஜெட் என்பது கைதேர்ந்த பவர் மேனேஜர். பேட்டரியை பாதுகாக்க இது ஒரு சிறந்த செயலியாகும். இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீடிக்க வைக்க முடியும். பேட்டரியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கவும் இந்த செயலி உதவுகின்றது.

Green Battery Saver and Manager

கிரீன் பேட்டரி சேவர் மற்றும் மேனேஜர்

இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் கருவியோடு இணைந்து செயல் புரிகின்றது. இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுள் நீடிக்கப்படுகின்றது. இதை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர். இந்த செயலி உங்கள் பேட்டரியின் நண்பன்.

DU Battery Saver

டியு பேட்டரி சேவர்

டியு பேட்டரி சேவர் ஒரு இலவச பேட்டரி சேமிக்கும் செயலி. இந்த செயலி உங்கள் பேட்டரி நீடித்து உழைக்க உதவுகின்றது. இதன் உதவியுடன் உங்கள் ஆண்ட்ராய்ட் போனுக்கு கூடுதலாக 50 சதவிகித ஆயுளை கொடுக்க முடியும். இந்த செயலியை கொண்டு பேட்டரியின் பவர் மேனேஜ்மெண்டை ப்ரீ-செட் செய்யவும், பேட்டரியை நல் முறையில் சார்ஜ் செய்யவும், பேட்டரியில் வரும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

Avast Battery Saver

அவாஸ்ட் பேட்டரி சேவர்

இந்த செயலி உங்கள் போனின் பின்புலத்தில் என்ன நிகழ்கின்றது என்பதை கண்டறிவதுடன், கருவியை வேகப்படுத்தவும், பேட்டரியை அதிக நேரம் உழைக்க செய்யவும் உதவுகின்றது. இதனால் நாள்முழுவதும் இண்டெர்நெட் பயன்படுத்தவும், திரையை பிரகாசமாக காட்டவும் பேட்டரியை இயங்க செய்யகின்றது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் உள்ள போன்களில் பயன்படுத்த முடியும்.

பவர் PRO

பவர் ப்ரோ

உங்கள் ஆண்ட்ராய்ட் கருவியில் பேட்டரியால் வரும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதிகமாக பவர் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் இந்த செயலி உதவுகின்றது. இதன் அறிவுபூர்வமான கூறுகள் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றது. இதன் உதவியால் உங்கள் கருவி அதிக நாட்கள் உழைக்கவும், பவர் மற்றும் பேட்டரியின் சக்தியை நீட்டிக்கவும் உதவுகின்றது.

Battery Optimizer and Cleaner

பேட்டரி ஆப்டிமைஸர் மற்றும் க்ளீனர்

உங்கள் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் டேப்ளெட்டில் வரும் பல வித பிரச்சனைகளை இந்த செயலி கொண்டு தீர்த்து விட முடியும். பேட்டரி ஆப்டிமைசர் 2.0 என்ற இந்த செயலி பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதற்காகவே செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டு உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு அதன் மெமரியை (RAM) சுத்தமாக வைக்கவும் உதவுகின்றது. இந்த செயலி உங்கள் மொபைலின் தரவுக்கான பயன்பாட்டை அடிக்கடி சரி பார்த்து கொண்டே இருக்கவும் உதவும்.

DU Speed Booster and Antivirus

டியு ஸ்பீடு பூஸ்டர் மற்றும் ஆன்டிவைரஸ்

உங்கள் போனில் உள்ள தேவையில்லாத தரவுகளையும் கோப்புகளையும் நீக்கி சுத்தம் செய்து தருவதில் இந்த செயலி வல்லமை கொண்டுள்ளது. இதன் லாக் உதவியோடு உங்கள் போனை உங்களை தவிர யாரும் பார்க்காத வண்ணம் பார்த்து கொள்ள முடியும். இதை கொண்டு ஆண்ட்ராய்ட் போனை 60 சதவிகித வேகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பது கூடுதல் செய்தி.

AVG Cleaner and Battery saver

ஏவிஜி க்ளீனர் மற்றும் பேட்டரி சேவர்

இந்த செயலி உங்கள் எஸ்டி கார்டு உள்ளிட்ட மற்ற இடங்களிலும் தேவையில்லாத செயலிகளை சரிபார்த்து சுத்தம் செய்யவும் அதிகமாக சேரும் கோப்புகளை நீக்கவும் உதவுகின்றது. இதனால் உங்கள் பேட்டரி அதிக நேரத்திற்கு உழைக்கவும், போன் வேகமாக செயல்படும். ஆகையால் உங்கள் மனம் கவர்ந்த பாடல் மற்றும் புகைப்படங்களை நீங்கள் போனில் சேமித்து கொள்ளலாம்.

%d bloggers like this: