Daily Archives: பிப்ரவரி 12th, 2016

சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 12.2.2016

சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 12.2.2016

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 10.2.2016

ராங் கால் – நக்கீரன் 10.2.2016

Continue reading →

சரித்திரம் மாறுகிறது? புதிய தலைமுறை

சரித்திரம் மாறுகிறது? புதிய தலைமுறை

Continue reading →

முதல்வரின் ‘கே’ பிளான்: மூத்த அமைச்சர்கள் கலக்கம்

‘கே’ பிளான் என, அரசியல் கட்சிகளால் அழைக்கப்படும், காமராஜர் திட்டத்தை, அ.தி.மு.க.,வில் செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதால், அமைச்சர்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Continue reading →

டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!

ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: மேடைக்கே வந்த கார்… பிரசாரம் போவாரா?

‘மேடைக்கே வந்த கார்… பிரசாரம் போவாரா ஜெ.?’ – கழுகார் அனுப்பி மெசேஜ் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது. ஒரு மணி நேரம் கழித்து லேண்ட் ஆனார் கழுகார். ‘‘மேட்டருக்குள் போவதற்கு முன்பு ஒரு ஃபிளாஷ்பேக்’’ என முன்னோட்டம் கொடுத்து இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிப் போனார் கழுகார்.

Continue reading →

இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்!

குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவது இயல்பு. ஆனால், சிலருக்கு வியர்த்துக் கொட்டும் வெயில் காலத்திலும் கூட காலை வேளையில் மூச்சு திணறல் ஏற்படும். இதை சுவாசக் கோளாறு என எண்ணி சாதாரணமாக இருக்க வேண்டாம், உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி இது.

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

Continue reading →

முட்டை… யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..?

‘முட்டை நல்லதுதான். ஆனால், சமைக்காத பச்சை முட்டையை எந்த மருத்துவரும் சாப்பிடச் சொல்வதில்லை. காரணம், அதனால் சில பிரச்னைகள் ஏற்படலாம்!’

Continue reading →

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. ஆனால் சிலருக்கு இப்பழம் பிடிக்காது. அத்தகையவர்கள் இப்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், பப்பாளியை அன்றாடம் உணவில் தவறால் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் தினமும் உங்கள் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உங்கள் அழகும் மேம்படும். குறிப்பாக பப்பாளி பல்வேறு மோசமான நோய்களின் தாக்குதல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

Continue reading →

ஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது?

இந்து பண்பாட்டின் படி, முறையான சடங்குகளுடன் சீரான முறையில் வழிபடாத இடங்களில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அவருக்கு அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்வது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமான் மிகவும் அப்பாவியானவர். அவரை வெகு விரைவில் குளிர்வித்து விடலாம். ஆனால், அவருடைய கோபமும் அதற்கேற்ப நன்றாக அறியப்பட்டவை.

வெறுமையான தேவைகளுடன் எளிமையான வாழ்க்கையை வாழ்வதையே சிவபெருமான் நம்பினார் என பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேப்போல் வெள்ளை ஊமத்தை பழம், வில்வ இலைகள், பாங்க், குளிர்ந்த பால், அரைத்த சந்தனம், விபூதி ஆகியவற்றையும் அவர் மிகவும் விரும்பினார். இவைகளுடன் சிவபெருமானை வழிபட்டால் அவரை எளிதில் குளிர்விக்கலாம். இது அவரை மட்டுமல்லாது அனைத்து கடவுள்களையும் ஈர்க்கும்.

இருப்பினும் சிவபுராணத்தின் படி, ஒரு தீவிர பக்தன் சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்திற்கு பின்வரும் இந்த ஐந்து பொருட்களைப் படைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும்.

ஒரு நாள் விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும், மும்மூர்த்திகளின் மத்தியில் தங்களின் உச்ச உயர்நிலையை நிரூபிக்க சண்டையிட்டுக் கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் ஆபத்தான ஆயுதங்களை எடுத்து தாக்க முற்படும் போது, அவர்கள் முன் ஜோதிலிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார். தன்னுடைய ஆரம்பம் ஆதியையும் அந்தத்தையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஆதியை தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு கேதகை மலரை கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு தேவன் தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். ஆனால் பிரம்ம தேவனோ ஆதியை கண்டுபிடித்து விட்டதாக கூறினார். அவருக்கு சாதகமாக கேதகை மலரும் பொய் சொல்லியது. இந்த பொய்யினால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையை வெட்டினார். அவரை யாரும் வணங்க மாட்டார்கள் என சாபமும் விட்டார். சிவலிங்கத்தை வழிப்பட இனி இந்த மலரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என கேதகை மலரை பார்த்து சபித்தார்.

சிவபுராணத்தின் படி, ஜலந்தர் என்ற அசுரனை கொன்று, சாம்பலாக்கினார் சிவபெருமான். கடவுள்களால் தோற்கடிக்க முடியாது என்ற வரத்துடன் (தன் மனைவியின் கற்பை பொறுத்து அமைந்திருந்தது) அருளப்பட்டவன் ஜலந்தர். அதனால் ஜலந்தரின் மனைவியான துளசியின் கற்பிற்கு விஷ்ணு பகவான் பங்கம் விளைவிக்க வேண்டியிருந்தது.

தன் கணவனின் மரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தாலும், ஏமாற்றப்பட்ட கோபத்தாலும் இனி சிவபெருமானை தன் இறைதன்மையுள்ள தன் இலைகளை கொண்டு யாரும் வழிப்பட கூடாது என சாபமிட்டார்.

சிவபெருமானுக்கு தேங்காய்களை படைத்தாலும், தேங்காய் தண்ணீரை கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யாவாக கருதப்படுவதால், அதனை அதற்கு பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரை கடவுளுக்கு படைத்தால், அதனை கட்டாயமாக பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.

புனிதமான மஞ்சள் பொடியை எப்போதும் சிவலிங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் என்பது பெண்களின் அழகை மேம்படுத்த பயன்படுத்தப்படுவது. சிவலிங்கம் என்பது சிவனின் அடையாளம் என்பதால் அதையும் பயன்படுத்தக் கூடாது.

திருமணமான இந்திய பெண்கள் குங்குமத்தை புனிதமாக பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தை கொண்டு அவருடைய சின்னத்தை வழிபடுவது புனிதமற்றதாக கருதப்படுகிறது.

முறையான முறையில் வழிப்படவில்லை என்றால் வீட்டில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட மாட்டாது. ஏனெனில் சீரான சடங்குகள் போல் அல்லாமல் சிவலிங்க பூஜை வேறு விதமாக குறிப்பிட்ட வழிமுறையில் அது செய்யப்பட வேண்டும்.

முதல் விஷயமாக, தினமும் குளித்த பிறகு உங்கள் மீது கங்கா ஜலத்தை தெளித்துக் கொள்ள வேண்டும். ஒருவரை உள்ளேயும், வெளியேயும் இது சுத்தப்படுத்தும் என நம்பப்படுகிறது.

சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து, அதனை மாற்றுவதற்கு முன், அதன் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின் கங்கா ஜாலம் கலக்கப்பட்டுள்ள சுத்தமான நீரால் நிறைக்கப்பட்டுள்ள சட்டியில் அதனை மூழ்கடிக்க வேண்டும். அது கல் வடிவில் இருந்தால், கங்கா ஜாலம் கலக்கப்பட்டுள்ள சுத்தமான நீரால் அதனை கழுவவும்.

எப்போதும் குளிர்ந்த பாலை சிவலிங்கத்திற்கு படைக்கவும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பேக் செய்யப்பட பாலை படைக்கக்கூடாது.

சந்தனத்தை கொண்டு மூன்று வரி திலகத்தை லிங்கத்தின் மீது தடவவும்.

வீட்டிற்கு கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட நாக யோனியின் மீது சிவலிங்கத்தை வைக்க வேண்டும்.

வீட்டில் சிவலிங்கத்தை தொடர்ச்சியான நீரோட்டத்தில் வைத்திட வேண்டும். அப்படி செய்யாமல் போனால் எதிர்மறை ஆற்றல்களால் சிவலிங்கம் ஈர்க்கப்படும்.

சிவலிங்கத்தை எப்போதும் தனியாக வைக்கக்கூடாது. அதனுடன் சேர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட கௌரி மற்றும் விநாயகரை அருகினில் வைத்திட வேண்டும்.

சிவலிங்கத்திற்கு படைத்ததை எப்போதும் பிரசாதமாக உண்ணக்கூடாது.

எப்போதும் வெண்ணிற மலர்களையே சிவலிங்கத்திற்கு படைக்க வேண்டும். அது தான் சிவபெ