Daily Archives: பிப்ரவரி 15th, 2016

உடல் நலம் காப்போம்!

கோடை காலத்தில், மாசு கலந்த தண்ணீரை பருகினால், பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால், காய்ச்சி ஆற வைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள்.
சீரான இடைவெளிகளில், சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில், நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல்

Continue reading →

எந்த கீரையில் கால்சியம் அதிகம்?

உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளன.

Continue reading →

மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்

இன்றைய கால கட்டத்தில், தகவல் தொழில் நுட்ப உலகில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கம்ப்யூட்டர்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவற்றை இயக்கும் நாம் ஒரு சில பழக்கங்களை, அவை தவறு எனத் தெரிந்தும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
தவறான அணுகுமுறையும் இயக்குதலும்:

Continue reading →

நடராஜ ஆசனம்

செய்முறை
1. விரிப்பில் நேராக நிற்க வேண்டும்
2. பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்
3. பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்

Continue reading →

தீர்த்தம் தரும் பலன்கள்

ருமுறை, பக்தர்கள் தங்களிடம் இறக்கி வைக்கும் பாவச்சுமை தாங்காமல் வருந்திய, கங்கை முதலான ஜீவ நதிப் பெண்கள் ஒன்பது பேரும் பிரம்மனைச் சரணடைந்து, விமோசனம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்களிடம், “தென் பாரதத்தில், கும்பகோண க்ஷேத்திரத்தில் ஈஸ்வரனால் அமைக்கப்பெற்ற மகாமகக் குளத்தில், மாசி மாதம், மக நட்சத்திரம் – பெளர்ணமி கூடிய நன்னாளில், குரு பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில் நீங்கள் நீராடினால் உங்களுக்குள்  இறக்கப்பட்ட பாவங்களின் சுமை நீங்கும்’’ என்று அருள் பாலித்தார்.

அதன்படியே, குறிப்பிட்ட புண்ணிய தினத்தில் நதிப்பெண்கள் திருக்குடந்தைக்கு வந்து மகாமக தீர்த்தத்தில் நீராடுவதால், அவர்களுடைய சுமையும் நீங்குகிறது. நமக்கும் அனைத்து நதிகளிலும் ஒரே இடத்தில் நீராடிய புண்ணியமும் கிடைக்கிறது. 

மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடுவோரின் பாவங்கள், தோஷங்கள், நோய்கள் யாவும் நீங்கி ஞானமும், ஆரோக்கியமும், சகல சம்பத்துகளும் பெறுவார்கள். அதேபோல், ஒருமுறை மகாமகக் குளத்தில் நீராடினால், காசியில் நூறாண்டு காலம் வாழ்ந்த புண்ணியமும், உலகை வலம் வந்த பலனும் கிட்டும் என்பர். இது பொதுவான பலன்கள். இதைத் தவிர மகாமகக் குளத்தில் இருக்கும் ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பலன் தர வல்லது. அந்த விவரம்…

1. இந்திர தீர்த்தம் – மோட்சம் அளிக்கும்.

2. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

3. யமதீர்த்தம் – மரண பயம் போக்கும்.

4. நிருதி தீர்த்தம் – பேய், பூதம் போன்ற தேவையற்ற பயங்கள் நீங்கும்.

5. வருண தீர்த்தம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. வாயு தீர்த்தம் – நோய்கள் அகலும்.

7. குபேர தீர்த்தம் – சகல செல்வங்களும் உண்டாகும்.

8. ஈசான தீர்த்தம் – சிவனடி சேர்க்கும்.

9. பிரம்ம தீர்த்தம் – இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.

10. கங்கை தீர்த்தம் – கயிலைப் பதவி அளிக்கும்.

11. யமுனை தீர்த்தம் – பொருள் சேர்க்கை உண்டாகும்.

12. கோதாவரி தீர்த்தம் – எண்ணியது நடக்கும்.

13. நர்மதை தீர்த்தம் – உடல் வலிமை உண்டாகும்.

14. சரஸ்வதி தீர்த்தம் – ஞானம் உண்டாகும்.

15. காவிரி தீர்த்தம் – புத்தியை மேம்படுத்தும்.

16. குமரி தீர்த்தம் – வளர்ப்புப் பிராணிகளுக்குப் பலன்களைக் கொடுக்கும்.

17. பயோஷ்னி தீர்த்தம் – கோலாகலம் அளிக்கும்.

18. சரயு தீர்த்தம் – மனக் கவலை தீர்க்கும்.

19. அறுபத்தாறு கோடி தீர்த்தம் – துன்பம் நீங்கி இன்பம் கூடும்.

20. தேவ தீர்த்தம் – சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.


நீராடும் நியதிகள்!

மகாமக யாத்திரை கிளம்பும்போதே ஏழை ஒருவருக்கு அன்னதானம் இட்டு அந்த நிறைவோடு கிளம்புவது நல்லது.

திருக்குளத்தில் நீராடுவதற்கு முதல் நாளே திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கருப்பூர், தாராசுரம், சுவாமிமலை முதலிய பஞ்ச குரோசத் தலங்களுக்குச் சென்று முறையாக வழிபடுதல் வேண்டும்.

மகாமக நாளில் நாம் விழித்து எழும்போதே கும்பேசுவரரை மனதளவில் பிரார்த்தித்து வருதல் வேண்டும்.

நல்ல நேரம் பார்த்து துணிமணிகள் களையாமல் சுவாமியை நோக்கி குளத்திலே மூழ்க வேண்டும்

மூழ்கி எழும் நேரத்தில் இறைவனைத் துதி பாடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையிலும் மனம் ஒப்பக்கூடாது.

குளத்தில் மூழ்கி எழுந்து நீராடலின் பலனை நிறைவாகப் பெற தீர்த்தக் கிணறுகளை நோக்கியும் கைகூப்பி வணங்க வேண்டும்.

முறையாக நீராடி தீர்த்தம் பெற்று அடுத்தபடியாய் பொற்றாமரைக் குளத்தை நோக்கி நடக்க வேண்டும். அப்போது, நாகேஸ்வரரையும், சோமேஸ்வரரையும் மனதளவில் பிரார்த்தித்தபடியே செல்ல வேண்டும்.

பொற்றாமரைக் குளத்தில் சுவாமி இருக்கும் திசையை நோக்கி முறையாக மூழ்கி எழ வேண்டும். எந்தக் குளத்திலுமே ஒருமுறை மூழ்கி எழுவதே போதுமானது. மூன்று முறையும் மூழ்கி எழலாம்.

பொற்றாமரைக் குள நீராடல் முடிந்து காவிரிக் கரை நோக்கி நடக்க வேண்டும். உடம்பிலுள்ள ஈரம் வடிய வடிய ஒட்டுமொத்த பாவங்களும் வடிவதாக உளமுருக எண்ணிடுதல் வேண்டும்.

காவிரியில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. மூழ்கி எழும் ஈரத்துடனேயே பெருமாள் கோயில்களின் தீர்த்தங்களைப் பெற்று வழிபட வேண்டும்.

ஒட்டுமொத்தப் பாவங்களும் நீங்கிட, இதுபோல் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆகிய மூன்று நீர் நிலைகளிலும் முறையாக நீராடுதல் வேண்டும்.