உடல் நலம் காப்போம்!

கோடை காலத்தில், மாசு கலந்த தண்ணீரை பருகினால், பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால், காய்ச்சி ஆற வைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள்.
சீரான இடைவெளிகளில், சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில், நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல்

மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும்.
கண்களை அதிகம் உபயோகிக்க வேண்டிய வேலையிலிருப்போர், அடிக்கடி வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தைப் பார்ப்பது
நல்லது. ஒரு நாளைக்கு நான்கு முறை, நல்ல தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும்.
ரத்த ஓட்டம் சீராக இருக்க, அதிக கோபம், உணர்ச்சிவசப்படுதல் இவற்றைத் தவிர்த்து, யோகா, தியானம் தினமும் செய்வது நல்லது.
குளிர் சாதனப்பெட்டியில் வைத்த பொருட்களை, அடிக்கடி எடுத்து சூடு செய்து உண்பது நல்லதல்ல. குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை ஒருமுறை எடுத்தால், அதை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
அதையும் இரண்டு நாட்களுக்கு மேல், தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. உணவை பொறுத்தவரை தற்போது பெருகி வரும் சாலையோர கடைகளில் தட்டுகளை, ஒரே பக்கெட்டில் நீர் வைத்து, அதிலேயே கழுவுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. கோடையில், மட்டுமல்ல, இந்த வழிமுறைகளை எப்போதும் பின்பற்றினால், உடல் நலம் காக்கலாம்.

%d bloggers like this: