Daily Archives: பிப்ரவரி 19th, 2016

ஏராளமான உயர்வுகள், சலுகைகள்: பட்டியலிட்டார் ஜெ.

சென்னை : சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பால், கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

Continue reading →

சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 19.2.2016

சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 19.2.2016

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 19.2.2016

ராங் கால் – நக்கீரன் 19.2.2016

Continue reading →

விஜயகாந்துக்கு ஏன் இந்த மவுசு? சொதப்பலா… திணறலா… சாமர்த்தியமா?

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் பின்னணி!

`தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி – குலாம்நபி ஆசாத் அறிவிப்பு’ என்ற அறிவிப்பு, பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது. இவர்கள் எப்போது பிரிந்திருந்தார்கள்… மீண்டும் சேர்வதற்கு?
`மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?’ என்ற காதலர் தின ஊடலைப்போலவே இருந்தது காங்கிரஸ் தலைவர்களை, கருணாநிதி தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு கட்சிகளும் சண்டை போட்டுக் கொள்வதுபோல ஊர் உலகத்துக்கு இதுவரை காட்டிக்கொண்டிருந்தார்கள்; இப்போதுதான் உடன்பாடு ஏற்பட்டதுபோலவும் காட்டிக் கொள்கிறார்கள்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: “முதல்வரிடம்தான் பேச வேண்டும்!”

வீதிக்கு வந்த அரசு ஊழியர்கள்… இரண்டு வாரங்களாக இறங்கிவராத அரசு!50 லட்சம் ஓட்டு?

‘‘அரசு ஊழியர் போராட்டம், ஆட்சி​யாளர்​களைக் கிடுகிடுக்க வைத்துவிட்டது’’ என்றபடியே வந்தார் கழுகார். ‘‘பின்னணி என்ன?’’ என்றோம்.

Continue reading →

மலச்சிக்கல் பிரச்னையா முள்ளங்கியில் தீர்வு

முள்ளங்கியை பயன்படுத்துவோர், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுகின்றனர். முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. இதன் கிழங்கு பகுதியில் இருப்பதை விட, ஆறு மடங்கு வைட்டமின் இ இதன் கீரைகளில் இருக்கிறது.

Continue reading →

குடி கெடுக்கும் குடி

மது அருந்தினால் 27 நோய்கள் ஆல்கஹால் அலெர்ட் !

ல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி… இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே  பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும்

Continue reading →

மகிமை மிகு மகாமகம்

வ்வொரு வருடமும் வரும் மாசி மகம் விசேஷமானதுதான். இருப்பினும் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது.

ஜோதிட ரீதியாக: கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பெளர்ணமி வரும். இந்தக் கும்ப மாத பெளர்ணமி திருநாளே மாசிமகம்.ஆனால் கும்ப ராசியில் சூரியன் இருக்க, சிம்மத்தில் சந்திரனுடன் குருபகவானும் இணைந்து திகழும் நாள் மகாமகம் ஆகும். இந்த நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே நிகழும். குருவின் ராசிச் சக்கர சஞ்சாரம் சுமார் 12 வருட காலம். ஆதலால், மாசி பெளர்ணமியில் குரு சிம்மத்தில் வரவேண்டுமானால், அதற்கு பன்னிரண்டு வருடங்கள் பிடிக்கும். ஆக, மகாமகமும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே வரும். சில தருணங்களில் 11 வருடங்களிலேயே மகாமகம் வருவது உண்டு. அதை இளைய மாமாமங்கம் என்பார்கள் (இது குறித்த தகவல், இந்த இதழ் சக்தி விகடனில் ‘அருட்களஞ்சியம்’ பகுதியில் இடம் பெற்றுள்ளது).

கோளியல் ரீதியாக : சூரியன், பூமி, சந்திரன், குரு ஆகிய கோள்களுடன் மக நட்சத்திரமும் நேர்க்கோட்டில் இருந்து, பெளர்ணமியோடு கூடிய காலமே மகாமகம். அன்று குரு கிரகம் அதன் துணை கிரகங்களுடன் விண்ணில் ஒளிருவதை தொலைநோக்கி மூலம் காணலாம் என்பார்கள் வானியல் அறிஞர்கள்.

இத்தகு புண்ணிய தினத்தில் நவகன்னிகா நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாகவும், பிரம்மாதி தேவர்கள் கும்பகோணத்தில் கூடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆகவே, இத்திருநாளில் குடந்தை தரிசனமும், மகாமக தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.

இந்த வருடம்…

பிப்.13 அன்று கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா, பிப்ரவரி 22 மகாமகத்துடன் நிறைவடையும். அன்று  மதியம் 12:00 முதல் 1:00 மணிக்குள் குரு சிம்ம ராசியில்  பிரவேசிக்கிறார். அன்று மகாமக பெருவிழா நிறைவடைகிறது.

பொதுவாகவே, அமாவாசை, பெளர்ணமி, மாதப் பிறப்பு, சிவ ராத்திரி, மாசி மகம் ஆகிய  நாட்கள்  புனித நீராடலுக்கான புண்ணிய காலங்கள். அதேபோன்று, மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடலுக்கு உகந்ததே, பிரம்மோத்ஸவத்தின் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நீராடுவதும் சிறப்புதான்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேலே குறிப்பிட்டுள்ள புண்ய காலங்களிலும் மகாமக தீர்த்தத்தில் நீராடலாம்.