Daily Archives: பிப்ரவரி 20th, 2016

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த

Continue reading →

உடல் நலம் காக்க தினம் ஒரு கொய்யா!

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும், கொய்யா பழத்தை, தினமும் மதிய உணவுடன், 200 கிராம் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்திலிருக்கும், வைட்டமின் சி

Continue reading →

மருந்து உலகின் மாஃபியாக்கள்!

`என் உடல் மீதான சுதந்திரத்தை நான்தான் தீர்மானிக்க வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. அப்படி எந்தச் சுதந்திரத்தையும் சாமானிய நோயாளிக்குக் கொடுக்காமல் இந்திய மருந்து சந்தையை வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது மத்திய அரசு. எய்ட்ஸ், புற்றுநோய் உள்பட 76 வகையான நோய்களுக்கான மருந்துகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இறக்குமதி வரிச் சலுகையை கடந்த வாரம் ரத்துசெய்திருக்கிறது மத்திய அரசு. `இதன் மூலம், 30 சதவிகிதம் வரையில் மருந்துகளின் விலை உயரக்கூடும்’ என மருத்துவர்கள் சொல்லும் நிலையில், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுடன் மிக நேரடியாகத் தொடர்புடைய இந்த விலை உயர்வு நிச்சயம் பெரும் மக்கள் கூட்டத்தைப் பாதிக்கும்.

Continue reading →

‘கூகுள் போட்டோஸ்’ தரும் கூடுதல் வசதிகள்

ஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது.

Continue reading →

ஸிகாவை விரட்டுவோம்!

“உலகத்தின் அதிபயங்கரமான விலங்கு எது தெரியுமா? கொசுதான்.” இதைச் சொன்னவர் பில்கேட்ஸ். வருடந்தோறும் கொசுக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, போர்களில், கலகங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகம் என்றால் நம்ப முடிகிறாதா? இதோ, எமனாக மிரட்டிய எபோலாவைத் தொடர்ந்து, மரண வேட்டையாட வந்திருக்கிறது ஸிகா வைரஸ். பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஸிகா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதையொட்டி, ‘உலக சுகாதார நிறுவனம்’ அவசரநிலையை அறிவித்திருக்கிறது. ஸிகா வைரஸ் தாக்கினால் குணப்படுத்த நேரடி மருந்துகளோ, ஸிகாவைத் தடுக்க தடுப்பூசிகளோ இல்லை என்பதால், உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது.

Continue reading →

தோஷம் நீக்கும் ஈசன்!

பரமனுக்கு 16 முகங்கள்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் – ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலை வில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், நுணுக்கமான வேலைப் பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன்பரப்பி’ என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

பக்திக்குச் சான்று

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின்மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ணபுரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

ஈசனின் பூரண அருளைப் பெற்று போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்டதோடு, சொர்ணபுரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருவதாக வரலாறு கூறுகிறது.

கல்வெட்டுச் சிறப்பு

இக்கோயிலைப் பற்றிய வரலாற்றை, ஆதி கிரந்த எழுத்துக் களிலும், தமிழ் எழுத்துக்களிலும் திருக்கோயில் சுற்றுச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம்.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப்பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங் களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

சிற்பங்களின் எளிமை

இக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிப்பதே. ஏனெனில், காகபுஜண்டருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதுபோலவே, வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக  காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

தேன் அபிஷேக மகிமை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும்.

நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபி ஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள்  கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல் லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்ட வர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசை யாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

மகாமகம் செல்வோர் கவனிக்க!

செய்ய வேண்டியவை!

தங்களுடன் ஏதேனும் ஓர் அடையாள அட்டையை  கையோடு எடுத்துச் செல்வது அவசியம்.

முதியோர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

ஓரு செய்தியை உண்மையானதா அல்லது வதந்தியா என உறுதிப் படுத்திக் கொண்டு அதற்கேற்ப நிதானமாகச் செயல்படுவது நல்லது.

பாதுகாப்பான மற்றும்  நம்பத் தகுந்த இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களையே ஏற்கவும்.

காவல்துறை வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும். அத்துடன் காவல்துறை/ அரசு உதவி மையங்களின் அறிவிப்புகளை கவனமாகக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

காவல்துறை வகுத்துள்ள வழித் தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

இயன்றவரையிலும் குழுவாகச் செல்வதே மிகவும் நல்லது.

தனியாக விடப்பட்ட, அடையாளம் தெரியாத, கண்ணைக் கவரும் பொருட் களைக் கண்டால் அருகில் உள்ள காவல்துறை உதவி மையங்களுக்கு உடனடியாகத்  தெரியப்படுத்தவும்.

தேவையான சுமையை மட்டும் கொண்டு செல்லவும்.

காலணிகளை அதற்கென நியமிக்கப்பட்ட இடங்களில் விட்டுச்செல்லவும்.

அனைத்து இடங்களிலும், பல மொழிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு – பலகைகளைப் படித்து அதன் விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படவும்.

முதியோர்களும், நோயாளிகளும், தாங்கள் உட்கொள்ளும் மருந்து – மாத்திரைகள் – சிகிச்சை குறிப்புகளைக்  கண்டிப்பாக கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.

வாகனங்களை, அரசு அனுமதிக்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

குப்பை அல்லது கழிவுப் பொருட்களை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவும்.

பிராசாதங்கள் / உணவு பொருட்கள் வாங்கும் இடங்களில் வரிசையாகச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை நகருக்கு வெளியே  தயாராகி வருவது நலம். தேவையான பணத்தை தன்னகத்தே  பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஏ.டி.எம். இயந்திரங்கள் போதுமான அளவுக்குப் பயன்படாமல் போகலாம்.

செய்யக் கூடாதவை!

தங்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகளை, விவரங்களை அறிமுகம் இல்லாதவர்களுடனோ அல்லது பொது இடத்திலோ பிறரிடம் பகிர வேண்டாம்.

வரிசை முறை என்றால் வரிசையில் மட்டுமே செல்ல வேண்டும்.  அடுத்தவரை முந்திச் செல்ல முயற்சிக்காதீர்கள்.

வதந்திகளை நம்பக்கூடாது  அதுபோல வதந்திகளை பரப்புவதும் குற்றமாகும். 

அறிமுகம் இல்லாதவர்களிட மிருந்து உணவுப் பொருட்களையோ அல்லது நொறுக்குத் தீனிகளையோ பெற்று உண்ண வேண்டாம்.

தனிப்பட்டவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டாம். அது ஆபத்தில் முடியலாம்.

ஒருவழிப் பாதைகளில் எதிர் திசையில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தனியாகப் பயணிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சங்கடம் விளைவிக்க வேண்டாம்.

சந்தேகத்திற்குரிய பொருட்களை நீங்களாக அப்புறப்படுத்துவது அல்லது எடுத்துச் செல்வதை கண்டிப் பாகத் தவிர்க்க வேண்டும்.

தங்களுடைய உடைமைகளை அறிமுகம் இல்லாதவரின் பாதுகாப்பில் விட்டுச் செல்ல வேண்டாம்.

விரும்பிய இடத்தில் நீங்கள் விட்டுச் செல்லும் காலணிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கழிவாகிவிடக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பொதுச் சொத்துக்கள் மக்கள் பயன் பாட்டுக்கு மட்டுமே; அவற்றை சேதப்படுத்த வேண்டாம். வழிகாட்டிப் பலகைகள் மீது அறிவிப்புகள் ஒட்ட வேண்டாம்.

கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

போக்குவரத்துக்கோ, மக்கள் செல்லும் பாதைகளுக்கோ இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப் பொருட்கள், பரிகாரப் பொருட்கள் அல்லது பழைய துணிகளை குளத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ கண்டிப்பாக தூக்கி எறியக் கூடாது.

தனிப்பட்ட முறையில் பிரசாதங்கள், உணவுப் பொருட்கள் விநியோகிப்பவர்கள் காவல்துறை உதவியுடன் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை உண்டாக்கக் கூடாது.

விலை உயர்ந்த பொருட்கள், தேவைக்கு அதிகமான பணம், அதிகமான நகைகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும்.