கொழுப்பை கரைத்து, உடற்சக்தியை அதிகரிக்க தினமும் இந்த ஜூஸை குடிங்க!

நிற்க கூட நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்த முடியவில்ல என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? இது, உங்களுக்கான நல்ல செய்தி.

ஆம், தினமும் வெள்ளரிக்காய் நீர் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல்நலம் மிகவும் ஆரோக்கியம் அடையும், உடல்பருமனை குறைக்கவும், உடற்சக்தியை அதிகரிக்கவும் இது பயனளிக்கிறது….

தினசரி உடற்பயிற்சியுடன் வெள்ளரிக்காய் நீர் பருகி வந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். மேலும், இது இதய நோய்கள் ஏற்படும் விகிதத்தை குறைக்கவும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் நீர் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், சோடா பானம், சர்க்கரை பானங்களை பருகுவதற்கு பதிலாக வெள்ளரிக்காய் நீரை தினமும் பருகுவது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேராமல் இருக்கவும் உதவுகிறது.

கால்சியம் சத்திற்கு இணையாக எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் கே-வும் அவசியம். வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின் கே மிகுதியாக இருக்கிறது. எனவே, எலும்பு வலி அல்லது பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் பருகலாம்.

வெள்ளரிக்காயில் அதிகப்படியான நீர் சத்து இருக்கிறது. இதனால், உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது.

வெள்ளரிக்காய் நீர் மட்டுமே புற்றுநோய் அபாயத்தை தடுத்துவிட முடியாது. ஒட்டுமொத்தமாக இதில் இருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் நார்ச்சத்து போன்றவை உடல்நலத்தை பாதுகாக்கும். இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை குறைக்கிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளரிக்காய் நீர் வைட்டமின் மற்றும் மினரல் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க உதவுகிறது. இதிலிருக்கும் வைட்டமின்களும், மினரல்களும் உடற்சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பை வலுப்படுத்தவும் செய்கின்றன.

வெள்ளரிக்காய் நீரில் இருக்கும் நார்ச்சத்து, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது. இயற்கையாகவே உடலை சுத்தம் செய்ய உதவும் உணவாக திகழ்கிறது.

சரியான உடற்பயிற்சி அல்லது உடல் வேலை செய்யாமல் இருந்தால் தசை வலிமை குறையும். அவர்கள் வெள்ளரிக்காயய் நீரை தினமும் பருகி வந்தால் நல்ல தீர்வுக் காணலாம்.

%d bloggers like this: