Daily Archives: பிப்ரவரி 26th, 2016

சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 26.2.2016

சுவாமி வம்பானந்தா –  குமுதம் ரிப்போர்ட்டர் 26.2.2016

Continue reading →

மதச்சாயம் பூசுவதாக நிரூபித்தால் ராஜினாமா: ஸ்மிருதி பேசியது என்ன?

புதுடில்லி: ”நான் மதச்சாயம் பூசுவதாக யாராவது நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன்’ என ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக கூறியிருந்தார்.
மத ரீதியான உணர்வுப்பூர்வ கருத்தை பார்லி.,யில் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இன்றும் ராஜ்யசபாவில் அமளி நிலவியது ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங் கட்சியின் மூத்த உறுப்பினர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் வலியுறுத்தினார் .
ஐதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம் தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது , அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு இடையே காரசார விவாதம் நடந்தது.
ஸ்மிருதி இரானியின் பேச்சின் சாராம்சம் இது:
என்னை பற்றி இந்த அவையில் குறை கூறுபவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், என் பெயர் ஸ்மிருதி இரானி. எனது பெயரை வைத்து நான் எந்த ஜாதி என கண்டுபிடிக்க முடியுமா? எதிர்கட்சியினரின் எந்த கேள்விக்கும் என்னால் பதில் கூற முடியும்.
ஐதராபாத் பல்கலை. மாணவர் தற்கொலை விவகாரத்தில் காங். கட்சியினர் பிணத்தை வைத்த அரசியல் நடத்துகின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவிற்கு கடிதம் எழுதினேன். அதில் மாநிலத்தில் சட்டம்,ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அவரிடம் இருந்து பதிலே வரவில்லை. அவரது மகளிடமும் பேசினேன்.
மாணவர்களுக்கு எதிராக நான் செயல்பட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளனர். மாணவர் வெமுலா தற்கொலை சம்பவத்தை காங் கட்சியினர் தான் அரசியலாக்கிவிட்டனர். பல்கலை வளாகத்தில் நடந்து வரும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, ஒரு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் மத்திய அரசின் கருத்தை தான் வலியுறுத்தினேன். இதில் நான் எனது கடமையை தான் செய்தேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க தேவையில்லை.
மாணவர் வெமுலா தற்கொலை வைத்து அரசியல் ஆதாயத்திற்காக கருவியாக காங்., கட்சி பயன்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய அளவில் எதையும் சாதிக்கவில்லை. இதை அரசியலாக கையில் எடுத்துள்ளனர் . எதிர்க்கட்சியினருக்கு எனது பதிலை கேட்க விருப்பமில்லை. நான் பெண் என்பதால், என்னை பேச அனுமதிக்கவில்லை. ரோகித் சஸ்பெண்ட் செய்ய காரணமாக இருந்த குழு, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அமைக்கப்பட்டது.
என்னை குற்றம்சாட்டும் எம்.பி.,க்கள், பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க எனது உதவியை நாடியுள்ளனர். ரோகித் தற்கொலை செய்த கொண்டது தொடர்பாக கிடைத்த கடிதத்தில் யாரையும் குற்றம்சாட்டவில்லை.
ரோகித் வெமுலா உடலருகே செல்ல மருத்துவரை அனுமதிக்கவில்லை. அவரை சோதிக்க அனுமதிக்கவில்லை. கன்னையா குமாரையும், தங்கள் அரசியல் லாபத்துக்கு இடது சாரிகள் பயன்படுத்தினர். ரோகித் வெமுலா தற்கொலையை, அரசியல் சந்தர்ப்பத்திற்கு ராகுல் பயன்படுத்தினார்.
ஒரு ரோமானிய அறிஞர் என்ன கூறினார் தெரியுமா? முட்டாள்களையோ, பேராசைக்காரர்களை வைத்துக்கொண்டு கூட ஒரு நாடு இருக்கலாம். ஆனால் துரோகிகளை வைத்துக்கொண்டு இருக்க முடியாது’ என்றார். இந்த இடத்தில் சாணக்கியர் கூறியதை நான் சொல்ல முடியும். ஆனால், அதற்கும் மதச்சாயம் பூசி விடுவீர்கள்.
காட்சி 1: நமது குழந்தைகள் பள்ளிகளில் என்ன கற்கிறார்கள்? ஒரு உதாரணத்தை என்னால் கூற முடியும். இது இப்போது தான் எனது கவனத்திற்கு வந்தது. 4ம் வகுப்பு மாணவர்களுக்கான சரித்திர பாடப்புத்தகம் அது. நமக்கு ஆசிரியர்கள் என்ன கற்றுத் தருகிறார்கள்? அந்த புத்தக ஆசிரியரின் பெயர் டீஸ்தா செடால்வத். சென்ற ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சர் கபில் சிபல் அமைத்த குழு தான் இப்புத்தகத்தை சிபாரிசு செய்தது. காட்சி 1: நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள் பாருங்கள். தொடர்ந்து பாடப்புத்தகங்களில் ஆங்கிலேயர்கள் சொல்லிச் சென்ற பழங்காலத்து இந்தியாவில் இந்துக்கள் இருந்தனர். இடைக்கால இந்தியா முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது தான்.
சத்ரபதி சிவாஜியைப் பற்றி கற்றுத் தரும்போது, அக்பரும், அவுரங்கசீப்பும் பொறுப்பான கல்வியாளர்களாக இருந்தனர் என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் நாம் சிவாஜியைப் பற்றி இப்படியா கற்றுத் தருவது. சிவாஜிக்கு எதிராக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. சீக்கியவர்களுக்கு எதிராக கலவரம் நடக்க 3 நாட்களுக்கு காங்கிரஸ் அரசு அனுமதி அளித்தது. கன்னியாகுமரியில் மைனாரிட்டி கிறிஸ்துவர்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் செயல்பட்டன என்றெல்லாம் புத்தகத்தில் கூறப்படுகிறது.
இப்படித் தான் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார்கள். இது தான் அவர்களது மதச்சார்பின்மை கொள்கையா?
காட்சி 2: ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள் தெரியுமா? காஷ்மீரில் இந்திய படைகளின் அட்டூழியங்களுக்கு எதிராக சிலர் போராடுகிறார்கள் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் படித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்.
ஆங்கில புத்தகத்தில் ‘அரைவ்’ (வந்து சேருதல்) என்ற வார்த்தைக்கு உதாரணமாக, ‘டில்லிக்கு ஒரு சீக்கியர் வந்து சேரும்போது, இந்துவால் கொல்லப்படுவார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு தலைப்பு என்ன தெரியுமா? ”வெறுப்புணர்வு மனநிலையை வளர்ப்பது” என்பது தான். ஐ.மு.அரசு மாணவர்களுக்கு தந்த பாடப்புத்தகங்கள் இப்படித் தான் இருக்கின்றன.
காட்சி 3: மகாராஷ்டிரா முழுவதும் சிவாஜியைப் பற்றி ஒரே மாதிரியான பாடம் தான் இடம் பெற்றுள்ளது. இதைப் படிக்கும் ஆசிரியர்களாலேயே பொறுக்க முடியவில்லை. ஒருவர் என்னிடம் கூறும்போது, ”முஸ்லீம் மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளிகளில், அப்சல்கானுக்கும் சிவாஜிக்கும் நடக்கும் மோதல் பாடத்திற்கு தான் நேரடியாக செல்கிறார்கள். சமூக மற்றும் அரசியல் நோக்கத்துடன் இந்த பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் முஸ்லீம் மாணவர்களின் கண்களை நேருக்கு நேர் எங்களால் சந்திக்க முடியவில்லை. எனது வகுப்பில் பல அப்சல்கள் இருக்கிறார்கள்” என்றார்.
நம்மைப் போலவே நமது குழந்தைகளையும் நடத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்கிறேன். அவர்கள் உங்கள் ஓட்டு வங்கி அல்ல என்கிறேன். இதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்புத்தகத்தை வினியோகிக்க வேண்டாம் என என்சிஇஆர்டி எச்சரித்தது. ஆனால் பள்ளிகள் கண்டுகொள்ளவில்லை. என்சிஇஆர்டி, இந்திய அரசு அமைப்பு இல்லையா?
இப்புத்தகம் பற்றி ஆய்வு செய்ய ஐ.மு.அரசால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற ஒருவர், இதை நான் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், ஒரு முஸ்லீம் துணை வேந்தர்.
என்சிஇஆர்டி எதற்காக சேவை செய்கிறது என்பதையே இந்தக் கமிட்டி புரிந்துகொள்ளவில்லை. கல்வியைப் பற்றி படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, பாகிஸ்தான் அறிஞர் கூறியதை கற்றுத் தருகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என துணைவேந்தர்கள் கூறியபோது, அவர்கள் கண்டிக்கப்பட்டனர். உ.பி.,க்கு சென்ற ராகுல், ”இந்த துணை வேந்தர்கள் எல்லோருமே ஆர்எஸ்எஸ் என்றார். இப்போது கூட மத்திய பல்கலைக்கழகங்களில் இருக்கும் 36 துணைவேந்தர்கள், காங்., அரசில் நியமிக்கப்பட்டவர்கள்.
இதில் யாராவது ஒருவர் வந்து, பல்கலைக்கு ஸ்மிருதி மதச்சாயம் பூசுகிறார் என்று சொல்லட்டும். நான் உடனே பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

மிஸ்டர் கழுகு: 20 நிமிடங்கள் பேசிய வெங்கய்ய நாயுடு – பி.ஜே.பி. நெருக்கடி!

சூடு பிடிக்கும் சொத்து வழக்கு விசாரணை

ழுகார் உள்ளே நுழையும்போதே சிறகுகளுக்குள் இருந்து சில தாள்கள் சிதறின. அதனை ஒவ்வொன்றாக சீட்டுக் கட்டுகளைப்போல அடுக்க ஆரம்பித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் பேச ஆரம்பித்தார். முதல் சீட்டில் விஜயகாந்த் என்று எழுதப்பட்டு இருந்தது.
“தே.மு.தி.க-வின் இன்றைய நிலைமையைச் சொல்லிவிடுகிறேன். காஞ்சிபுரம் மாநாட்டில் தி.மு.க-வை விஜயகாந்த் அட்டாக் செய்யவில்லை என்பதை கடந்த இதழில் சொல்லி இருந்தேன். பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பிரேமலதா சொல்​வதாகவும், அவரது தம்பி சுதீஷ்,

Continue reading →

ராங் கால்–நக்கீரன் 25.2.2016

ராங் கால்–நக்கீரன் 25.2.2016

Continue reading →

ஜிம்முக்கு போகாமலே ‘ஜம்’ முனு ஆகலாம்!

டல் எடை, தொப்பை பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுபவர்களும், அதைக் குறைக்க அதிகம் மெனக்கெடுபவர்களும் பெண்களே. ‘‘உண்மையில், எடையைக் குறைக்க ஜிம்தான் வழி என்பதில்லை. உணவுப் பழக்கமும், வீட்டில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளுமே உங்கள் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து, கண்ணாடி முன் ‘சிக்’கென நிறுத்தும்!’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சைனி..

Continue reading →