Monthly Archives: ஜூன், 2016

பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்!

‘இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்…’ என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, ‘சாரி… இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க…’ என, அசடு வழியச் சொன்னது!
மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!
‘இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்…’ என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே தவிர, ஏதோ ஜப்பானிய ரயில் போல தங்களை நினைத்து, நேரத்தை சொல்லி, பின், அவதியுறக் கூடாது.

Continue reading →

லைஃப் இன்ஷூரன்ஸ்… சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!

கணேஷ் ஐயர், மூத்த துணைத் தலைவர் (க்ளெய்ம்ஸ் அண்ட் அண்டர் ரைட்டிங்), கோட்டக் மஹிந்திரா ஓல்ட் மியூச்சுவல் லைஃப் இன்ஷூரன்ஸ்.

 

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ்  பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.

லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. 

Continue reading →

எண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

‘சுட்ட எண்ணெயைத் தொடாதே, வறுத்த பயறை விடாதே’ என்பது நம் முன்னோர் வழக்கு. இன்று நாம் எண்ணெயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, நம் முன்னோர்கள் பயந்ததில்லை. காரணம்… அவர்கள் பயன்படுத்திய எண்ணெ யின் தூய்மை, தரம்! 

மரச்செக்கிலோ அல்லது கல் செக்கிலோ ஆட்டி எடுத்த எண்ணெயில் மணமும் நிறமும் அடர்த்தியாக இருக்கும். சமையலுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும். பாரம்பர்ய சமையல்படி நாம் சமைக்கும் மற்றும் தாளிக்கும் எண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்க்கும்போது, எண்ணெயில் இருக்கும் நச்சை நீக்கி அதைத் தூய்மையாக்குவதோடு, எளிதில் ஜீரணமாகும் நிலைக்கும் மாற்றுகிறது.

Continue reading →

வேர்ட் பைல் வகைகள்

நம்மில் பெரும்பாலானவர்கள், கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருபவர்களாக இருப்போம். ஆனால், நம்மில் பலரும், வேர்ட் பைலை .docx படிவத்திலேயே சேவ் செய்து வருகிறோம். இத்துடன், இன்னும் பல வகைகளில், வேர்ட் பைலை சேவ் செய்திட முடியும். பல வாசகர்கள், வேர்ட் டாகுமெண்ட்டின் பல வகைகள் குறித்தும், அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர். வேர்ட் டாகுமெண்ட்களை சேவ் செய்திடத் தரும் பைல் வகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Continue reading →

கருமை… சொரசொரப்பு… காணாமல் போக எளிய வழிகள்!

பெண்கள் வெளியே பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்று, அக்குள் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள். ஸீ த்ரூ ஸ்லீவ்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும் பெண்களுக்கு மட்டுமல்ல, இது ஆரோக்கியம் வேண்டும் அனைத்துப் பெண்களும் கவனம்கொடுக்க வேண்டிய விஷயமும்கூட. அக்குள் பகுதியில் படரும் கருமை மற்றும் சொரசொரப்பை நீக்க எளிமையான தீர்வுகளைச் சொல்கிறார், ஈரோட்டில் உள்ள மஹா ஹெர்பல் பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மகேஸ்வரி.

அக்குளின் கருமை நீங்க…

Continue reading →

‘செல்’லிலே விழித்து… ‘செல்’லிலே தூங்கி!

‘‘சார், உங்களை நான் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே… நீங்க என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டா?’’

‘‘இல்ல சார்… நான் ரொம்ப நாளா உங்க பக்கத்து வீட்லதான் இருக்கேன்!’’

– இதற்கு முன்பாக இந்த நகைச்சுவையை நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். அது சிரிக்க அல்ல, சிந்திக்கவே என்பதை உணர்த்தும் வகையில் நம் அருகில் உள்ளவர்களைக்கூட அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த டெக்னாலஜி யுகம்.

Continue reading →

பெண்களை விட அந்த நினைப்பில் அதிகம் மூழ்கும் ஆண்கள்…

மும்பை: மனிதர்களுக்கு உணவு, உறக்கம் போல பாலுணர்வும் முக்கியமானதுதான். வேலைப்பளு நிறைந்த இன்றைய கால கட்டத்தில் தம்பதிகளுக்கு இடையேயான புரிதல், பாலியல் ரீதியான தொடர்புகள், சந்தோசங்கள் அரிதாகி வருகின்றன.

பாஸ்ட்ஃபுட் கலாச்சாரம் போலவே இன்றைக்கு தாம்பத்யமும் நடைபெறுகிறது. மனிதர்களிடையேயான பாலியல் உணர்வுகள் மரத்து போய்விட்டதா? பணிச்சூழல் பாலியல் உணர்வுகளை மறக்கடித்து வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதனாலேயே தம்பதிகளுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது.

மனிதர்களின் பாலியல் உணர்வு, சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு பாலியல் குறித்த சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டுள்ளது. Continue reading →

மிஸ்டர் கழுகு: 500 கோடி?

“நான் சொன்னதுபோலவே இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைமை மாற்றம் உறுதியாகிவிட்டது” என்று சொன்னபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்கிறதாம்?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி  வெற்றிபெற்று விடக் கூடாது என்று காங்கிரஸ் பிரமுகர்களே

Continue reading →

தோற்றவர்களின் கதை – 4

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!
வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

Continue reading →

கூகுள் தேடலில் சில வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Continue reading →