Daily Archives: ஜூலை 1st, 2016

தோற்றவர்களின் கதை – 6

சுசி திருஞானம்

‘ஊடக உலகின் ராணி’ என்று போற்றப்படுபவர் அவர். 25 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர் அவர். அமெரிக்க கறுப்பினத்தவர்களிலேயே சுயமாக முன்னேறிய நம்பர் ஒன் கோடீஸ்வரர் அவர். அமெரிக்காவை, வாசிக்கும் தேசமாக மாற்றியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. சுருங்கச் சொன்னால் தன்னம்பிக்கையின் மறுபெயர் ஓப்ரா வின்ஃப்ரே. வறுமை, வன்கொடுமை, இழிச்சொல் அனைத்தையும் தன்னம்பிக்கையால் வென்றவர் ஓப்ரா வின்ஃப்ரே.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 1.7.2016

ராங் கால் – நக்கீரன் 1.7.2016

Continue reading →

காலேஜ் டிரான்ஸ்ஃபர், `டிசி’… கல்லூரி மாணவர்களுக்கு கனிவான கைடு!

‘‘கல்லூரி மாணவ, மாணவியர் தனிப்பட்ட காரணங்களினால் வேறு கல்லூரிக்கு மாற்றல் கோரும்போதும், `டிசி’ பெறும்போதும் சில விஷயங்களைக் கவனிக்காவிட்டால் பின்னாட்களில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம்’’ என்று சொல்லும்  தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் தொடர்பு அலுவலர் டாக்டர் ஆழ்வார்சாமி, பொறியியல் மாணவர்களின் இதுபோன்ற பிரச்னைகளுக்கான தீர்வு மற்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.

காலேஜ் டிரான்ஸ்ஃபர்

‘‘ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர், வேறு பொறியியல் கல்லூரிக்கு மாற்றல் கோரினால்… உடல்நிலை, பெற்றோர் வேலை நிமித்தம் என அதற்காக அவர் கூறும் காரணம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில்தான் மாறுதல் கிடைக்கும்.

Continue reading →

கசக்கும் கணக்கு… கற்கண்டாய் இனிக்க..!

குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள் ‘மேத்ஸ்’ என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்று இன்றைய தேதியில் எதுவும் இல்லை. மேலும், போட்டித் தேர்வுகள், ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று எதிர்காலத்தை எதிர்கொள்ள, கணிதம் மிகவும் முக்கியம். அப்படியிருக்க, பள்ளிப் பருவத்தில் கசக்கும் கணக்கை உங்கள் குழந்தைகளுக்கு

Continue reading →

வேர்ட் டிப்ஸ்!-நீளவரியை மடக்கி அமைக்க:

நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

Continue reading →

நாவல் தரும் நலம்

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை, தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை, உடலுக்கு பலன் தரும். இப்போது நாவல் (நாகப்) பழ சீசன். எளிதாகக் கிடைக்கக் கூடிய, விலை குறைந்த பழங்கள் இவை. எனவே தாராளமாக அனைவரும் சாப்பிடலாம்.

Continue reading →

எது வந்தாலும் ஏற்போம்!

ஜூலை 1 – கூர்ம ஜெயந்தி

நல்லது, கெட்டது கலந்தது தான், வாழ்க்கை. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதே, திருமாலின் கூர்மவதார தத்துவம்.
ஒருமுறை, ஐராவதம் என்ற யானை மேல் பவனி வந்தான், இந்திரன். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில் பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கியவன், அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் மாலையை தூக்கி, காலில் போட்டு மிதித்து விட்டது.
இந்திரனின் இந்த அலட்சிய செயல், முனிவரைக் கோபப்படுத்தவே, ‘செல்வச் செருக்கால் தானே இப்படி செய்தாய்; இனி, செல்வ வளமின்றி தேவலோகம் நலிந்து போகட்டும்…’ என, சாபமிட்டார். நடுங்கிப் போன இந்திரன், சாப விமோசனம் கேட்டான். ‘திருமால் கூர்மவதாரம் (ஆமை வடிவம்) எடுக்கும் காலத்தில், உனக்கு விமோசனம் கிடைக்கும்…’ என்றார் துர்வாசர்.
தேவர்கள் வலிமை இழந்ததால், அசுரர்கள் ஆட்டம் போட்டனர். தங்களை பாதுகாக்கும்படி திருமாலை வேண்டினர், தேவர்கள். ‘பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் என்னும் மருந்தை பெற்று அருந்தினால், நிலையான வாழ்வு வாழலாம்…’ என்ற அவரது ஆலோசனையை ஏற்றனர். ஆனால், இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அசுரர்களிடம் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் உதவிக்கு அழைத்தனர்.
வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடல் கடையப்பட்டது. ஆனால், மத்து கடலின் அடியில் புதைந்து கொள்ளவே, தேவ, அசுரர்களால் கடலை கடைய முடியவில்லை. உடனே, திருமாலை பிரார்த்தித்தனர், தேவர்கள். அவர் ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்று, மந்தார மலையாகிய மத்தை, தன் முதுகில் தாங்கிக் கொண்டார். பின், தேவ, அசுரர்கள் எளிதில் கடலைக் கடைந்தனர். அப்போது, வாசுகி பாம்பு, வலி தாளாமல் விஷத்தைக் கக்கவே, இரு தரப்பினரும் மயக்க நிலையை அடைந்தனர்.
இதையறிந்த சிவன், அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். அப்போது, விஷத்தின் ஒரு பகுதி கீழே சிதறியது. அந்த சிதறலில் இருந்து பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும், விஷச்செடி மற்றும் கொடிகளும் தோன்றின. தொடர்ந்து அனைவரும் கடலைக் கடையவே, திருமாலின் அம்சமான தன்வந்திரி, அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அவரைத் தொடர்ந்து லட்சுமி தாயார் வெளிவந்தாள். இந்திரனும் இழந்த செல்வத்தை அடைந்தான்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது வரும் கஷ்டங்களே விஷப்பூச்சிகளும், விஷச்செடிகளும்! அதிலிருந்து கிடைக்கும் நன்மையே அமிர்தம். கஷ்டங்களைப் பெரிதுபடுத்தாமல், எது வந்தாலும் ஏற்போம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால், திருமாலின் திருவருளைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்!