Daily Archives: ஜூலை 9th, 2016

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சூரியகாந்தி விதை

இதில் நிறைவாக உள்ள வைட்டமின் இ திசுக்கள் ஆக்சிஜன் பயன்படுத்துவதால் உருவாகும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் பிரச்னையைத் தவிர்க்கிறது. செலீனியம், டி.என்.ஏ அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குகிறது. மக்னீசியம் வலுவான எலும்புக்கு உதவுவதுடன், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, தசைகளில் ஏற்படும் அதிகப்படியான இறுக்கத்தைப் போக்க உதவுகிறது. சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் போக்குகிறது.

Continue reading →

தோற்றவர்களின் கதை – 9

சுசி திருஞானம்

சில்வஸ்டர் ஸ்டாலோன்!
1976-ல் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட்டைக் கலக்கிய சூப்பர் டூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ராக்கி, ராம்போ போன்ற கதாபாத்திரங்கள் மூலமாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் அவர். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அவரைவைத்துப் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டனர்.
அந்த இடத்தைப் பிடிக்க அவர் நடத்திய போராட்டம் வலி நிறைந்தது. அடுக்கடுக்கான தோல்விகள் தன்னைப் புரட்டி எடுத்தபோதும், அசாத்தியமான தன்னம்பிக்கையோடு போராடித் தோல்விகளைத் தோற்கடித்த முன்னுதாரண மனிதர் அவர்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: சுவாதியை தேடி வந்த பெங்களூரு மனிதர்கள்!

லேப்டாப் எங்கே? தாக்கியது யார்?

‘‘கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்தில் இருக்கிறேன்” என்று கழுகாரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல் வந்தது. எதற்காக இருக்கும் என்ற குழப்பம் தீருவதற்கு முன்பே கழுகார் வந்து சேர்ந்தார்.
‘‘சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது.

Continue reading →

சளியை விரட்ட இஞ்சி

மழைக்காலம் துவங்கியாச்சு..! இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

Continue reading →

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
எங்கு எழுத்துருக்களைக் கண்டறியலாம்?

Continue reading →