Daily Archives: ஜூலை 25th, 2016

நம் தூக்கம்… நம் கையில்!

தூக்கமின்மையை துரத்தும் உபாயங்கள்…

 

‘‘தூக்கமின்மையால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பலர். ஆனால், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று எண்ணி அதற்கு உரிய கவனம் கொடுத்து அவர்கள் சரிசெய்யாததால், அவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் பல’’ என்கிறார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியும், மனநல மருத்துவருமான டாக்டர் ஆனந்த் பிரதாப். நோய்களைப் பற்றி தொடர்ந்து வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ தொடரில், முழுமையான தூக்கம் என்றால் என்ன என்பதில் இருந்து, தூக்கமின்மைக்கான சிகிச்சை முறைகள்வரை விரிவாகப் பேசுகிறார் டாக்டர்.

தூக்கம் ஏன் தேவை?

Continue reading →

இன்னொரு இரும்புப் பெண்மணி?

மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே.
இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்… தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி.

Continue reading →

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்… கல்யாண சிக்கலும்!

கார்டன் வட்டாரத்தில் இருந்து வந்து இறங்கிய கழுகார், ‘‘கல்யாணச் செய்தியில் ஆரம்பித்துக் ‘கபாலி’யில் முடிக்கிறேன்… இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது’’ என்று கொக்கிப்போட்டு ஆரம்பித்தார்.
‘‘சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் –  இளவரசி தம்பதியரின் மகன் விவேக்கின் திருமணம், ஆகஸ்ட் 29-ம் தேதி வானகரத்தில் உள்ள ஒரு பிரமாண்டமான கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கிறது. ‘ஆகஸ்ட் இறுதிக்குள் திருமணம் செய்துவிட வேண்டும்’ என ஜோதிடர்கள் கணித்துவிட்டதால், பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார் சசிகலாவின் தம்பி திவாகரன். பெண்ணின் பெயர் கீர்த்தனா.

Continue reading →