Daily Archives: ஜூலை 28th, 2016

ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!

யல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என்றொரு பெயரும் உண்டு. இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இதன் இலைகளை வாயில் இட்டு மென்று சுவைத்தால், கொழகொழ எனப் பசை போன்று இருப்பதை உணர முடியும்.

Continue reading →

விண்டோஸ் 10 முதல் ஆண்டு வெளியீடு

விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கான முதல் ஆண்டு மேம்படுத்தல் வரும் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. தற்போது விண்டோஸ் 10 பயன்படுத்தப்பட்டு வரும் 35 கோடி சாதனங்களில், இது இலவசமாக மேம்படுத்தப்படும். இதில் பல புதிய வசதிகள் தரப்படும். குறிப்பாக Windows Ink, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மற்றும் கார்டனா செயல்பாடுகள் விரிவாக்கம் எனப் பல வசதிகள் தரப்பட இருக்கின்றன.

Continue reading →

புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

புரோபயாட்டிக்

புரோபயாட்டிக் (Probiotic) என்பது தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும், மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடிய உயிருள்ள பாக்டீரியா மற்றும் ஈஸ்ட். இவை, உடலுக்கு நல்லது.

நம் செரிமான மண்டலத்தில் இந்த நல்ல பாக்டீரியா உள்ளன. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் உள்ளிட்ட செரிமான செயல்பாட்டுக்குத் துணைபுரிகின்றன.

இவை, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும். மேலும், உணவுகள் மூலமாகவும் கிடைக்கின்றன.

புரோபயாட்டிக் உணவுகள்

Continue reading →

அரசு ஊழியர் வீட்டுக் கடன்… நல்ல தருணத்தை நழுவ விடாதீர்கள்!

ருமானத்துக்கு தகுந்த மாதிரி வாடகை வீடு கிடைத்தால் போதும் என்ற சிந்தனை மாறி, நமக்கும் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் சுதந்திரமாக வாழலாம் என்ற சிந்தனை பெருகிவிட்ட காலகட்டமிது. அதனால்தான் நடுத்தரவாசிகள் கடன் வாங்கியாவது புறநகர் பகுதிகளில் சிறிய அளவில் வீட்டினை வாங்கிக் கொள்கிறார்கள். இப்போது அனைவருக்கும் வீடு என்பதில் அரசும் முனைப்பாக உள்ளது. வீட்டுக் கடன் பெறுவதற்கு வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் என எத்தனையோ வழிகள் உள்ளன.

Continue reading →

ஸ்ட்ரெஸ் பிராப்ளமா… `ஆப்’ இருக்கு… பதிவிறக்கு!

ரபரப்பான வாழ்க்கையில் 10 வயதிலேயே இப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் ஆப்ஸ் இருக்கும் போது, இந்தப் பிரச்னைக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன? யெஸ்… இந்த `ஆப்’களை பதிவிறக்கம் செய்யுங்கள்…  ஸ்ட்ரெஸ்ஸை விரட்டுங்கள்.

பசிஃபிக்கா (PACIFICA)

Continue reading →

மாடித்தோட்டம்… முழுமையான வழிகாட்டி!

வீட்டுத்தோட்டம்

“ரசாயனங்கள் பயன்படுத்தி விளையும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்ண வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு பெருகி வருவதால், வீட்டு மொட்டைமாடிகளில் தோட்டம் அமைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் மட்டும் தற்போது சுமார் 20,000 ஏக்கர் அளவுக்கு மொட்டைமாடிகள் காலியாக உள்ளன. இவற்றில் 3 – 5 சதவிகித பரப்பளவில் மட்டுமே மாடித்தோட்டம் இருக்கிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்பதுடன், மற்ற நகரங்களிலும் இது பரவலாகும்’’ என்று நம்பிக்கை பொங்க சொல்கிறார் தோட்டக்கலைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற தங்கவேலு.

மாடித்தோட்டம் அமைப்பதற்கான முழுமையான வழிகாட்டலை அவரிடமே கேட்டபோது, வரிவரியாக விளக்க ஆரம்பித்துவிட்டார்.

தொட்டிக்கலவை!

Continue reading →

அபியங்கம் – ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

சாஜ் என்றதும் சொகுசு பார்லர், ஸ்பாக்களில் வழங்கப்படும் உடலுக்கு  இதம் தரும் சிகிச்சை என்ற எண்ணம்தான் பலருக்கும் உள்ளது. தாய் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ், அரோமா தெரப்பி மசாஜ் என்று விதவிதமான மசாஜ்கள் உள்ளன. அவரவர் உடலுக்கு, பருவ காலத்துக்கு ஏற்ப, மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தி, முழு உடலுக்கும் செய்யப்படும் நம் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் பற்றி பார்ப்போம். ‘அபியங்கம்’ எனப்படும் முழு உடலுக்கான எண்ணெய்

Continue reading →