Daily Archives: ஜூலை 31st, 2016

கண்களைப் பாதிக்கும் ஒளிர்திரை

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்!

 

நீங்கள் ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வளவு நேரம் செல்போன், லேப்டாப், கணினி, டி.வி போன்ற டிஜிட்டல் திரைகளைப் பார்க்கிறீர்கள் என ஒரு பேப்பரில் பட்டியலிடுங்கள். கட்டுரைக்குச் செல்லும் முன்னர் மறக்காமல் பட்டியலிட்டுவிட்டுப் படியுங்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?  ‘அட! இவ்வளவு நேரம் நாம் இதில் செலவிடுகிறோமா’ என ஆச்சர்யப்படுகிறீர்களா? நீங்கள் மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையே டிஜிட்டல் திரை முன்தான் அமர்ந்திருக்கிறது. சிலருக்கு வேலை, சிலருக்குப் பொழுதுபோக்கு எனப் பல காரணங்கள் உள்ளன. அதனால் என்ன என்று கேட்கலாம். ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ எனும் பிரச்னை, தற்போது  வேகமாக அதிகரிக்க இதுதான் காரணம்.

Continue reading →

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்.. Continue reading →