Daily Archives: ஓகஸ்ட் 1st, 2016

கூகுள் மறைத்துள்ள விளையாட்டுகள்

கூகுள் நிறுவனம் நமக்குப் பயன்படக் கூடிய பல வசதிகளைத் தந்துள்ளது. தொடர்ந்து வழங்கியும் வருகிறது. டிஜிட்டல் உலகில் தன் ஆளுமையை நிலை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், வேடிக்கை நிறைந்த சில விநோதங்களையும், விளையாட்டுகளையும், தன் தளத்தில் மறைத்து வைத்துள்ளது. இவை குறித்து எந்தவிதமான டாகுமெண்ட்களும் இல்லை. இருப்பினும் நாம் இவற்றைப் பெற்று மகிழலாம்.
கூகுள் தன் தளத்தில் பல விளையாட்டுகளையும் “ஈஸ்டர் எக்ஸ்” என்று சொல்லப்படுகிற ஆச்சரியம் தரத்தக்க திரைக் கூத்துகளையும் எப்போதும் தன் தளத்தில் மறைத்து வைத்திருக்கும். இவற்றில் சில நாம் ஏற்கனவே தெரிந்த விளையாட்டுகளாக இருக்கும். ஆனால், இந்த தளத்தில் கிடைக்கும் என அறியாமல் இருப்போம். அது போன்ற சில விளையாட்டுகளையும், “ஈஸ்டர் எக்ஸ்” விந்தைகளையும் இங்கு காணலாம்.

Continue reading →

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது. Continue reading →

இறைவியே நலமா?

இல்லத்தரசிகள் ஹெல்த் கைடு

டயட் உடற்பயிற்சி ஓய்வு

 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உலாவும் பிரபல வீடியோ ஒன்று… ஒருவரிடம், “உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்” என்பார். “சமையல் யார் செய்வார்கள்?”, “துணி யார் துவைப்பார்? “வீட்டை யார் சுத்தம் செய்வார்?”, “குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?” எனும் ஒவ்வொரு கேள்விக்கும் “மனைவி சும்மாதான் இருக்கிறார். அதனால், அவர்தான் செய்கிறார்” என்று பதில் சொல்கிறார் கணவர். இப்படி, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்பவர்களாக இல்லத்தரசிகள் இருந்தாலும், அவர்களை வேலையற்றவர்கள் என்றுதான் சொல்கிறது நம் சமூகம்.

Continue reading →