Daily Archives: ஓகஸ்ட் 5th, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் எளிய பரிகாரங்களுடன்!(2.8.16 முதல் 1.9.17 வரை)

ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன் (சக்தி விகடன் )

பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார்.கல்வி அறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு என்று அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் குருபகவான். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். களங்கம் இல்லாத மனம், நீங்காத செல்வம், மாசற்ற வாழ்க்கை போன்ற அனைத்துக்கும் சொந்தக்காரர் குருபகவான். பொறுமை, நன்றி மறவாமை, பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்ற நல்ல பண்புகளை நமக்கு அருள்பவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.

Continue reading →

கவலை வேண்டாம், கல்லீரல் இல்லை

*தலைவலி, தலை சம்பந்தப்பட்டது அல்ல. வயிற்றில் அமில சுரப்பு, மலச்சிக்கல், போதுமான தண்ணீர் குடிக்காதது, தலைவலிக்கான காரணங்களாக இருக்கலாம். காரணத்தை கண்டறிந்து சரி செய்யாமல், ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) வந்தவுடன், எக்ஸ் – ரே, ஸ்கேன் என்று எடுப்பது வீண்.

Continue reading →

ஜெ-வுக்கு பயப்படாத சசிகலா புஷ்பா சரிந்த கதை!

மிழ்நாட்டின் மானம் டெல்லியில் சந்தி சிரித்தது கடந்த 30-ம் தேதி.  தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் சென்னை செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சிவாவிடம் கருணாநிதியும், சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதாவும் விசாரணை நடத்தினர். இதன்பிறகு, சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அரசியலில் பொது ஒழுக்கம் சிதைந்துபோனதன் அடையாளமாகத் தெரிகிறது இந்தக் காட்சி.
விமான நிலையத்தில்…

Continue reading →

உங்கள் பாதத்தில் இப்படி வீக்கம் இருந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பது தெரியுமா?

சுமார் 610,000 அமெரிக்கர்கள் இதய நோயினால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர். நெஞ்சு வலி அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், இதய நோயைக் கண்டறியலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் இதய நோய் இருப்பதை உடலின் வேறுசில அறிகுறிகளைக் கொண்டும் அறிய முடியும். Continue reading →

தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

உடல் வலிமை அதிகரிக்க என்று மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. பார்க்கவும், ருசிக்கவும் அத்திப்பழம் சற்று வினோதமாக இருப்பினும், உடல் வலிமைக்கு அருமையானது. Continue reading →

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

விண்டோஸ் + டேப் கீ: (Windows + Tab): இந்த இரு விசைகளையும் அழுத்தினால், நமக்குக் கிடைப்பது, செயல்பாட்டில் இருக்கும் அனைத்து விண்டோக்களும். முந்தைய இயக்க முறைமைகளில், ஆல்ட்+டேப் அழுத்தினால், திறந்திருக்கும் விண்டோக்கள் ஒவ்வொன்றாகக் காட்டப்படும். தற்போது அனைத்து விண்டோக்களும் சிறிய கட்டங்களாகக் காட்டப்படும். நமக்கு தேவைப்படும் விண்டோவில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Continue reading →