Daily Archives: ஓகஸ்ட் 7th, 2016

சானிடைசர்… ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!

ணம் சம்பாதிப்பதை முன்வைத்து ஆரோக்கியத்துக்கு சவால்விடும் நிறைய பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அந்நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம்…  விளம்பரம்!  விளம்பரம் மட்டும் செய்துவிட்டால் போதும்… ஒரு பொருளின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், அந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை யாரும் இங்கு ஆராய்வதில்லை.

Continue reading →

வேகம் இல்லா இணையத்திற்கு உரம் சேர்க்கும் பேஸ்புக்

இந்தியாவில் சராசரி இணைய வேகம், பன்னாட்டளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது என பல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றில் இணைய வேகம் முதல் நிலையில் உள்ளது. இதில் தென் கொரியா முதலிடம் பெறுகிறது. ஆனால், இந்தியா இந்த வகையில், 114 ஆவது இடத்தில் உள்ளது. இதனை உணர்ந்தே கூகுள் நிறுவனம், இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தன் தகவல்களைக் கண்டு பயன்படுத்தும் வழியைத் தந்து வருகிறது. சென்ற டிசம்பரில், “யு ட்யூப் ஆப் லைன்” என்ற வசதியை வழங்கியது.
பேஸ்புக் நிறுவனமும் தற்போது இந்த வழியில் இறங்கியுள்ளது. இணைய இணைப்பில்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான ஒரு சோதனைத் திட்டத்தினை ஜூலை 11ல் தொடங்கியது. இதனை “டெக் க்ரன்ச்” (TechCrunch) அறிவித்தது.

Continue reading →