Daily Archives: ஓகஸ்ட் 9th, 2016

கருவிலிருந்தே ஆரோக்கியம் – அந்த 1000 நாட்கள்!

ந்தியா ஏழை நாடு அல்ல; ஏழைகளின் நாடு’ என்றார் நேரு. நம் குழந்தைகள் மண் சாப்பிடுவதும், பல்ப்பம் சாப்பிடுவதும் குறும்புக்காக மட்டும் அல்ல. அதற்குப் பின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற தீவிரமான பிரச்னையும் உள்ளது. இன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உலகம் முழுவதுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. ‘உலக அளவில், ஐந்து வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளில் 45 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்கிறார்கள்’ என்று கவலை தெரிவித்து உள்ளது ‘உலக சுகாதார ஆய்வு நிறுவனம்.’

குழந்தை பிறந்த பிறகு அதற்கு சத்தான உணவு அளிப்பது மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கும் என்று நினைத்தால், அது தவறு. கருத்தரித்ததில் இருந்து, 1,000 நாட்கள் வரையிலான காலகட்டம்தான் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  அதாவது, தாயின் வயிற்றில் இருக்கும் 270 நாட்கள், பிறந்த பிறகு முதல் இரண்டு வருடங்கள் (730 நாட்கள்) என மொத்தம் 1,000 நாட்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானவை.

‘ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள்தான் அந்தக் குழந்தையின் சுகாதாரம், ஊட்டச்சத்து, புத்திக்கூர்மை, அறிவாற்றல், உயரம், பள்ளியில் செயல்படும் விதம், வாழ்நாளில் தனிநபரை எதிர்கொள்ளும் திறன், உணர்வு மேலாண்மை, சமூகத் தொடர்பு, பழக்கவழக்கம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை முடிவு செய்கிறது எனப் பல்வேறு ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்.

கர்ப்ப காலம் (முதல் 270 நாட்கள்)

Continue reading →

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கண்பார்வை இழக்க நேரிடுகிறது?

டயாபடிக் ரெடினோபதி என்ற கண் பார்வை கோளாறைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பாத்திருப்பீர்கள் அல்லது சந்தித்திருப்பீர்கள். கண்களில் திசுக்கள் வளர்ந்து அதனால் கண்பார்வை இழக்கவும் நேரிடும். Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்..

செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும்

Continue reading →