Daily Archives: ஓகஸ்ட் 10th, 2016

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கழுகார் வந்தார்.
‘‘சட்டசபை நடவடிக்கைகளா… கோட்டை நிர்வாகமா? எதைப் பார்க்கப் போனீர்?” என்று கேட்டோம் கழுகாரை.
‘‘சட்டசபை வட்டாரத்தில்தான் உமது நிருரைப் பார்த்தேனே. நான் ரவுண்ட் அடித்தது கோட்டைக்குள்!” என்றபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.
‘‘முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வது அனைத்தும்தான் நடக்கிறது. அவரது கண் அசைவில்தான் அனைத்தும் நகர்கிறது என்று ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். அவரும் வெங்கடரமணனும் ஒரே கோணத்தில் சிந்திப்பவர்கள். கடந்தமுறை முதல்வர் அலுவலகத்தில் ராம மோகன ராவ், ஷீலா ப்ரியா இருவரும் ஒரே கோணத்தில் செயல்பட்டார்கள். ஷீலா ப்ரியா பதவிக்காலம் முடிந்து, போய்விட்டார். ராம மோகன ​ராவை முதல்வர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி விட்டார்கள். இருவரும் போன பிறகு, தனிக்காட்டு ராஜ்ஜியம் நடத்துகிறாராம் ஷீலா பாலகிருஷ்ணன்.’’
‘‘முதல்வர் அலுவலகத்தில் இன்னொரு ஷீலா இருந்தாரே?… அவர் என்ன செய்கிறார்?’’

Continue reading →

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்

புதுடில்லி : மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

மசோதா குறித்து படிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்பையும் மீறி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம்; சாலை விபத்தில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு; அதிக வேகமாக வாகனத்தை ஓட்டினால், 4,000 ரூபாய் அபராதம்; ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

வேர்ட் டிப்ஸ்..இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய:

இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully))

Continue reading →

தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்

சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். Continue reading →

கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும் ??

கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி. Continue reading →