Daily Archives: ஓகஸ்ட் 11th, 2016

தோலின் வயதைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்

வெளித்தோற்றத்திற்கு முக்கியம், தோல் அழகு. தோல் பளபளப்பாக இருக்க வேண்டும்; சுருக்கங்களே விழக் கூடாது. குறிப்பாக, நம் வயதை தோல் வெளிக்காட்டவே கூடாது என்பது பொதுவான விருப்பம். அதற்காகத்தான் கிரீம்கள், லோஷன்கள் என்று விதவிதமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த அழகு சாதனப் பொருளும் தோலின் நிஜத்தை மாற்றவே முடியாது என்பதுதான், அறிவியல்பூர்வமான உண்மை.சர்வதேச தோல் ஆராய்ச்சியாளர்கள், தோலின்

Continue reading →

சமாதான வளையத்தில் சசிகலா புஷ்பா! -கார்டனுக்காக களமிறங்கிய சீனியர் எம்.பிக்கள்

பாலியல் புகார், பணமோசடிப் புகார் என தொடர் வழக்குகளால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ‘ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சிக்குள் அம்மா சேர்த்துக் கொள்வார்’ என சமாதானப்படலத்தைத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள்.
டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் தொடர்பாக, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இதன்பின்னர் ராஜ்யசபையில் பேசிய சசிகலா, ‘ என் தலைவர் என்னை அறைந்தார்’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ‘ அ.தி.மு.கவினரால் என் உயிருக்கு ஆபத்து. பாதுகாப்பு வழங்குங்கள்’ என மேல்சபைத் தலைவரிடம் கோரிக்கையும் வைத்தார். சசிகலாவின் இந்த அதிரடியை அ.தி.மு.க மேலிடம்

Continue reading →

சிறிய விஷயங்களின் அற்புதம்!

ம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம்.

கறிவேப்பிலை: ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும்.

Continue reading →

விண்டோஸ் 10 முதலாண்டு மேம்படுத்தல்

விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை மாற்றங்களையும், புதிய வசதிகளையும் இந்த முதலாண்டு அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
இந்த புதிய மேம்படுத்தல் தொகுப்பு “பதிப்பு 1607 (Version 1607) என அழைக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, Settings > Updates & Security > Windows Update என்று செல்லவும். இந்த திரையில், Check for Updates என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருந்தாலே இது முடியும். இதில் கிளிக் செய்தவுடன், சில நிமிடங்கள் சோதனை செய்யப்பட்டு, Feature update to Windows 10, version 1607 என்று காட்டப்படும். Update என்பதில் கிளிக் செய்தால், உடனே, அதற்கான கோப்புகள் அனைத்தும் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்யப்படும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், கம்ப்யூட்டருக்கு வரும் மின்சக்தி தடைப்படக் கூடாது. லேப்டாப் கம்ப்யூட்டர் எனில், பேட்டரியில் போதுமான மின்சக்தி இருக்க வேண்டும். மின் இணைப்பில் இருப்பதுவும் நல்லது.
Continue reading →

விரல்கள் செய்யும் விந்தை

உதான முத்திரை

 

தானம் என்றால் மேலே நோக்குதல் என்று அர்த்தம். உடலில் தலையே பிரதானம். அதைத் தாங்கிப்பிடிப்பது கழுத்து. இந்தக் கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாக்க உதவுகிறது உதான முத்திரை. மேல் நோக்கு வாயுவைக் கட்டுப்படுத்தும். அதாவது, கீழிருந்து மேல்நோக்கி வரும் ஏப்பம், வாந்தி, குமட்டல், சளித் தொந்தரவு, விக்கல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

எப்படிச் செய்வது?

Continue reading →