Daily Archives: ஓகஸ்ட் 13th, 2016

ராங் கால் -நக்கீரன்10.8.16

image

Continue reading →

இந்திய மொழிகளில் இமெயில் முகவரி

நம் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் தற்போது ஆங்கிலத்தில் தான் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகளை அமைப்பது சாத்தியம் என்றாலும், அது குறித்த முயற்சிகள் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தன. ஆனால், தகவல் தொழில் நுட்ப உலகில் முதல் இடங்களில் இயங்கும் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இதனைச் சாத்தியமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. ரீடிப் நிறுவனத்தின் உதவியுடன் இந்த மாற்றம் அமலுக்கு வரும். இந்திய அரசும், இந்த இரு நிறுவனங்களை விரைவில் இந்த வசதியைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
இந்திய ஜனத்தொகையில், 20% மக்கள் தான் ஆங்கில மொழியைப் பேசி வருகின்றனர். அதாவது, மொத்த மக்கள் 130 கோடிப் பேரில், 26 கோடி பேர் தான், ஆங்கில மொழியைக் கையாளுகின்றனர். ஆனால், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2016 ஆம் ஆண்டின் இறுதியில், 46.2 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடிய மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, இந்திய மொழிகளில், மின் அஞ்சல் முகவரிகள் அமைக்க முடியும் என்றால், அது இந்தியர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

Continue reading →

இரும்புச்சத்தும் ஆரோக்கியமும்!

ம் உடல் ஆரோக்கியமாகச் செயல்பட இரும்புச்சத்து மிகவும் அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டுக்கும் அவசியமானது. ரத்தத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

ஏன் தேவை?

Continue reading →

உயிர் காக்கும் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தான தினம் – ஆகஸ்ட் 13

 

டல் உறுப்பு தானம் செய்வதில், இந்தியாவைப் பொருத் தவரை தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புக்கள் கிடைக்காமல் மரணத்தைத் தழுவுகின்றனர். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு என்பது நெடிய பயணம். அதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஒருவர், தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும்போது, அதனால் சுமார் எட்டு  பேர் வாழ்க்கை பெறுகிறார்கள். எனவே, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வைப் பரவலாக்க வேண்டியது நம் கடமை.

இறந்த பின்னும் நம்மை வாழவைக்கும் அற்புதம் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள். உடல் உறுப்பு தானம் குறித்த, பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. எது சரி, எது தவறு என்பதைப் பார்ப்போம்.

மித் 1

Continue reading →