Daily Archives: ஓகஸ்ட் 19th, 2016

வளர்ந்துவிட்டேன் அம்மா…

பெண்ணின் உடல், மனம் சார்ந்த வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல் பூப்பெய்துதல். இது பெண்ணுக்கு மட்டும் அல்ல… ஆணுக்கும் மிக முக்கியமான பருவம். செக்ஸ் என்றாலே பாவமான விஷயம் என்று கருதிக்கொண்டு, அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய உடலியல் சார்ந்த விஷயங்களைக்கூட சொல்லித்தர தயங்குகிறோம். இன்றைக்கும் பெரும்பான்மையான பள்ளிகளில், உயிரியல்

Continue reading →

வெள்ளி வென்றார் சிந்து; ஒலிம்பிக்கில் புதிய சாதனை

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பாட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து. பைனலில், ஸ்பெயினின் கரோலினாவிடம், போராடி தோல்வியடைந்தார்.

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பைனல் நேற்று நடந்தது. இதில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, ‘நம்பர்-1’ வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

முதல் செட்டின் துவக்கத்தில் இருந்தே பின் தங்கினார் சிந்து (3-7). இது 6-11 என, தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் 16-17, அடுத்து 19-19 என, கரோலினாவை நெருங்கினார் சிந்து. பின் தொடர்ந்து அசத்த, முதல் செட்டை சிந்து 21-19 என, கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் 2-11 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்ற நிலையில், இரண்டாவது செட்டை சிந்து 12-21 என, இழந்தார்.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி மூன்றாவது மற்றும் கடைசி செட்டுக்கு சென்றது. இதிலும் மீண்டும் சொதப்பத் துவங்கினார் சிந்து (1-6).

இதன் பின் சற்று சுதாரித்துக் கொண்ட சிந்து, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ஸ்கோர் 10-10 என, சமனை எட்டியது. இருப்பினும், சிந்து மறுபடியும் ஏமாற்ற 11-15 என, பின் தங்கினார்.

கடைசியில் மூன்றாவது செட்டை 15-21 என, இழந்தார். 1 மணி நேரம், 19 நிமிட போராட்டத்தின் முடிவில், 21-19, 12-21, 15-21 என்ற கணக்கில் போராடி தோற்றார் சிந்து. இருப்பினும், ஒலிம்பிக் வரலாற்றில் முதல் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர், வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சிந்து. கரோலினா தங்கம் வென்றார்.

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.
= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.
= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.
= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.
= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.
= பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்
கொடுக்கலாம்.
ஜே.பி.ஜெயந்தி, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்

தைராய்டு பிரச்னையைத் தவிர்ப்போம்

சில பெண்கள் திருமணத்துக்கு முன்பு வரை ஒல்லி பெல்லியாக இருப்பார்கள். கல்யாணம் ஆனதும் குண்டாகிவிடுவார்கள். ‘சரி! கல்யாணப் பூரிப்பு, குண்டாகிட்டாங்க’ என்று நினைப்போம். சிலர் நாளுக்கு நாள் ஒல்லியாகிக்கொண்டே போவார்கள். ‘வொர்க் டென்ஷன்… அலைச்சல் அதான்…’ என அவர்களாகவே ஏதாவது ஒரு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் இப்படி காரணமற்ற உடல் எடை இழத்தல் அல்லது அதிகரித்தல் தைராய்டு பிரச்னையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

தைராய்டு

Continue reading →

கேஸ்ட்ரைடிஸ்

கேஸ்ட்ரைடிஸ் என்றால் என்ன?
இரைப்பையின் சுவரிலுள்ள உட்தோலின் அழற்சியையே கேஸ்ட்ரைடிஸ் என்கிறோம்.

Continue reading →

குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள தளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல வசதிகளையும் அனுபவிக்கலாம். இந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல் பயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை மிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம்.
டேப்களை பின் செய்திடுக

Continue reading →