Daily Archives: ஓகஸ்ட் 20th, 2016

ஹெல்த்தி கிச்சன்!

ந்தக் காலத்தில், வீட்டிலேயே அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் வைத்துக்கொண்டு, பெண்கள் குனிந்து, நிமிர்ந்து சட்னி முதல் மாவு வரை எல்லாவற்றையும் கையாலேயே அரைத்தனர். வேலைக்கு வேலையும் முடிந்தது, உடலுக்குப் பயிற்சியும் கிடைத்தது. இன்று, மிக்ஸி, கிரைண்டர், அவன் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே மின்சாதனங்கள் வந்துவிட்டன. ஈஸியாக வேலையை முடிக்க வேண்டும் என, மின்சாதனங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினாலும், அதன் பராமரிப்பில்தான் இருக்கிறது மின்சாதனங்களின் ஆயுளும் நம் ஆரோக்கியமும்.

Continue reading →

தோற்றவர்களின் கதை -ஜி.டி.நாயுடு

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடு. கோவை மாநகரம் இன்றும் தொழில்​முனைப்புக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால், அதற்கான விதைகளைப் போட்டவர்களில் முக்கியமானவர் ஜி.டி.நாயுடு. மோட்டார் வாகன மேம்பாடு, கேமரா, வானொலி, விவசாயம் எனப் பல துறைகளில் பிரமிக்கத்தக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் அவர். 

Continue reading →

20 லட்சம் பேருக்கு சாப்ட்வேர் பயிற்சி

இணையத் தேடல் பிரிவில் பிரம்மாவாக இயங்கும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் 20 லட்சம் சாப்ட்வேர் பொறியாளர்களுக்குத் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினைத் தொடங்க இருக்கிறது. நூறு கோடி பேருக்கு மேல் மொபைல் போன் பயனாளர்களாக இருக்கும் இந்திய நாட்டில், லட்சக் கணக்கில் இயங்கும் மென்பொறியாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த திட்டத்தினை வகுத்துள்ளது.

Continue reading →

மிஸ்டர் கழுகு : விஜயகாந்தைக் கிண்டலடித்த வைகோ!

“தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரபரப்பு பற்றத் தொடங்கி​விட்டது. அரசியல் கட்சிகள், கூட்டணிக் கணக்குகளைக் கச்சிதமாகப் போடத் தொடங்கிவிட்டன. அதனால், தமிழகத்துக்கு விரைவில் மற்றொரு தேர்தல் வேடிக்கை வரப்போகிறது” என்ற பரபரப்புத் தகவலோடு ஆரம்பித்தார் கழுகார்.
‘‘விரிவாகச் சொல்லும்.”

Continue reading →