Daily Archives: ஓகஸ்ட் 23rd, 2016

நலம் தரும் நிலவேம்பு

சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன.  நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading →

ஃபைனான்ஷியல் ஆப்ஸ்

எக்ஸ்பென்ஸ் மேனேஜர்!

பட்ஜெட்டை சரிவரக் கையாளவும், செலவுகள் கையைக் கடிக்காதபடி பார்த்துக்கொள்ளவும்தான் பலருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. எக்ஸ்பென்ஸ் மேனேஜர் என்ற செயலி இதை மிகவும் சிறப்பாகக் கையாள்கிறது. தினசரி, வாரம், மாதம், ஆண்டு என நம் பட்ஜெட்டை நமக்கு
ஏற்றவாறு பட்டியல் போட்டுப் பார்க்க இந்த ஆப்ஸ் பேருதவியாக இருக்கும்.

Continue reading →

என்பிஎஸ்: அனைவரையும் கவர்ந்திழுக்க அதிரடி மாற்றங்கள்!

ரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் ஓய்வூதியம் என்ற நிலையை கொண்டு வந்ததன் விளைவாக உருவான திட்டம் என்பிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற  தேசிய ஓய்வூதியத் திட்டம்.

இந்தத் திட்டத்தில் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். 2004-க்குப் பிறகு அரசு  வேலையில் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது கட்டாயம். தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

Continue reading →

சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன?

டலின்மிக முக்கியமான  துப்புரவுத் தொழிற்சாலை, சிறுநீரகம். ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் மகத்தான பணியைச் செய்து, உடலின் ஆரோக்கியம் காக்கும் அற்புத சேவகர்கள் இவை. சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னை. நமது ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, இயல்பு வாழ்வைப் பாதிக்கும் இந்தப் பிரச்னை, சராசரியாக 10-ல் ஒருவருக்கு ஏற்படுகிறது. ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…வேலை செய்யாத ஸ்பெல் செக்

வேலை செய்யாத ஸ்பெல் செக்
வேர்ட் செயலியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக அருமையான ஒரு வசதி, ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பிழை திருத்தம் தான். ஆனால், நாம் தொடர்ந்து டாகுமெண்ட்களை உருவாக்கி வருகையில், சில வேளைகளில், சில வகை சொற்களில் அல்லது டெக்ஸ்ட்டில், இந்த எழுத்துப் பிழை திருத்தம் செயல்படாத நிலையைப் பார்க்கலாம். இதனை எப்படி சீர் செய்வது என இங்கு காணலாம்.

Continue reading →