Daily Archives: ஓகஸ்ட் 24th, 2016

அலர்ஜியை அறிவோம் – பூச்சிக்கடி ஒவ்வாமை

 

பூச்சி கடித்தால் அலர்ஜி ஆகும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். நம் ஊரில் எறும்புக் கடிக்கும் தேனி கடிப்பதற்கும் யாரும் பயப்படுவது இல்லை. ஆனால், அமெரிக்காவில் இந்த இரண்டுக்கும் ரொம்பவே பயப்படுகிறார்கள். ‘டெக்சாஸ் ஃபயர் ஆன்ட்’ (Texas fire ant)  எனும் எறும்பும், ‘ஹைமினோப்டெரா’ (Hymenoptera) எனும் தேனியும் கொட்டியதால் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு பலர் இறந்தே போயிருக்கின்றனர். இந்தியாவிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கேரளாவில் ஒரு வகை ‘நெருப்பு எறும்பு’ இருக்கிறது. இது கடித்துவிட்டால், மரணத்தின் வாசல் வரை சென்றுவிட்டுத்தான் திரும்ப வேண்டும். எனவே, பூச்சிக்கடிதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

அலர்ஜி ஆகும் பூச்சிகள்

Continue reading →

சக்தி முத்திரை

பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ‘உடலுக்கு சக்தி வேண்டும்’ என்று, கடைகளில் விற்கும் பானங்கள் பலவற்றையும் பருகுகிறோம். ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றினாலே, போதிய சக்தி கிடைத்துவிடும். கூடுதலாக, எந்தச் செயற்கையான பானங்களும் தேவை இல்லை. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!
எப்படிச் செய்வது?

Continue reading →

கிரெடிட் கார்டு… கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

கிரெடிட் கார்டு – இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. வங்கிகளே போன் செய்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே  கொண்டு வந்து தந்துவிடும் அளவுக்கு எளிமையான விஷயமாக மாறிவிட்டது. மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் இதோ…

1.அளவுக்கு மீறி செலவழிக்காதீர்கள்!

Continue reading →

இதயத்துக்கு இதமான 10 மாற்றங்கள்!

*பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்துவிட்டு, நட்ஸ், காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.
*மீன் உணவு மிகவும் நல்லது. பொரிக்கப்பட்ட மீன்களைத் தவிர்த்துவிட்டு, வாரம் இருமுறை குழம்பு மீன் அல்லது தவாவில் சுட்டெடுத்த மீன் சாப்பிடலாம்.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…மாறாநிலை எழுத்தினை மாற்ற

மாறாநிலை எழுத்தினை மாற்ற
எக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர்

Continue reading →