கண்களில் பிரசர்

உயர் ரத்த அழுத்தத்தை போல், கண் பிரசர் குறித்தும் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக, கண்ணில் உள்ள திரவத்தின் அழுத்தம், குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதிகரிக்கும் போது, அழுத்தமானது, பார்வை நரம்புகளை பாதிக்கிறது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதே, குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் போது, இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பார்வை நரம்பு பாதிக்கப்படுவதால், பார்க்கும் திறன், படிப்படியாக குறைந்து போகும்.

பார்வை நரம்பு என்பது, நாம் பார்க்கும் போது விழித்திரையில் விழும் பிம்பங்களை, மூளைக்கு கடத்துகின்ற நரம்பு. நம் கண்கள், ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நரம்புகளை கொண்டது. குளுக்கோமாவில், பல வகைகள் இருந்தாலும், மிக அதிகமானது, திறந்த கோண குளுக்கோமா தான்.
நெருங்கிய குடும்பத்தினரிடையே இருந்திருந்தால், இது பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். அதே போல, 45 வயதுக்கு மேல் வாய்ப்பு அதிகம். நீரிழிவு இருந்தாலும், சட்டென்று ஒட்டிக் கொள்ளும். ஸ்டிரோயிட் வகை மருந்துகளை, மாத்திரைகளாக, ஊசியாக அல்லது ஐட்ராப்ஸ் அதிகம் உபயோகித்தவர்களுக்கும், கண்ணில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், வாய்ப்பு கூடுதல் தான். இதில், பக்கப்பார்வை இழப்பு ஏற்படுவது தான் அதிகம்.
நீங்கள், நேராக பார்த்துக் கொண்டிருக்கும் போது, பக்கவாட்டில் ஏதாவது அøசந்தால், உங்களால் காண முடியாது. குளுக்கோமா நோயாளிகளுக்கு, அவரது
பார்வையின் பரப்பானது வெளிப்புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால், நேர் பார்வை வழக்கம் போல் தெளிவாக இருக்கும்.
இதனால் தான், அவருக்கு, தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாமல் போகிறது. இதை கவனிக்காமல் விட்டால், பார்வை மேலும் குறைந்து வரும். சில காலங்கள் கழித்து, ஒரு குழாய் வழியாக பார்ப்பது போல், நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில், முழு பார்வையும் பறிபோகும் சூழல் ஏற்படலாம். பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, கண் மருத்துவரை அணுகி, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது, பாதிப்பு இல்லாவிட்டாலும், வருடத்துக்கு ஒருமுறையாவது, பார்வையை பரிசோதிப்பது நல்லது.
கண்ணில் பார்வைக்குறைவு ஏற்பட்டது என்று கருதி, நீங்களாகவே, கடைக்கு சென்று, மூக்கு கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதை விட்டு விட்டு, கண் மருத்துவரை சந்திப்பது தான் ஒரே வழி. அவர், உங்கள் கண்களின் உட்பகுதியை, நவீன கருவிகள் மூலம் பரிசோதிக்கும் போது, குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும், கண்டுபிடித்து விட முடியும்.
நோயின் நிலைக்கு ஏற்ப, சிகிச்சை முறைகளில் மாற்றம் இருக்கும். ஐட்ராப்ஸ், மாத்திரைகள், லேசர் சிகிச்சை உட்பட பல்வேறு முறைகள் வந்து விட்டன. எனவே, கண்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

ஒரு மறுமொழி

  1. உங்கள் இணைப்பை தொடர முடியவில்லை என்ன சொய்வது நன்றி

%d bloggers like this: