உருளைக்கிழங்கு தோலே… உனக்கு இவ்வளவு சத்துக்களா

# உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
# தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

# உருளைக் கிழங்கு தோல், ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
# உருளைக் கிழங்கு தோலில் வைட்டமின், ‘பி6’ அதிகம் உள்ளது. அது மூளையில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களான, செரோடோனின், டோபோமைன் உருவாக உதவும். இந்த ஹார்மோன், நம்முடைய நடத்தை, துாக்கம், பசி உணர்வு, செரிமானம், நினைவாற்றல் என்று பலவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது. செரோடோனின் சுரப்பு குறைந்தால், மன அழுத்தம் ஏற்படும்.
# உருளைக் கிழங்கு தோலில், வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. பொட்டாஷியம் தவிர மெக்னீஷியம், ஜிங்க் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் உள்ளன.

%d bloggers like this: