Daily Archives: செப்ரெம்பர் 5th, 2016

மிஸ்டர் கழுகு: ஞானதேசிகன் சஸ்பெண்ட்… பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்!

‘வைகுண்டராஜனை வளைக்க ஆளும் கட்சி பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வருகிறது” என்ற செய்தியோடு வந்த கழுகார், “புகார் என்று வந்தால், அமைச்சர்களுக்கு மட்டும் அல்ல… அதிகாரிகளுக்கும் அ.தி.மு.க ஆட்சியில் ஆபத்துதானே?’’ என்று கேள்வியைப் போட்டார்.
‘‘உண்மைதானே?’’

Continue reading →

ஆதாரம் என்றும் நீர்தானே!

‘உலகில் 10ல் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, 66 கோடியே 30 லட்சம் பேருக்கு! இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் தண்ணீருக்குதான் முதல் இடம். தொழில்நுட்பம் அதிநவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் மூன்றில் ஒரு பள்ளிக்கூடத்தில் கூட சுத்தமான நீரும் கழிவறை வசதியும் இல்லை. தண்ணீரை தங்கத்தைப்போல கையாளவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். பாலுக்கு நிகராக தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறோம்.

Continue reading →

ஆதாரம் என்றும் நீர்தானே!

‘உலகில் 10ல் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, 66 கோடியே 30 லட்சம் பேருக்கு! இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் தண்ணீருக்குதான் முதல் இடம். தொழில்நுட்பம் அதிநவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் மூன்றில் ஒரு பள்ளிக்கூடத்தில் கூட சுத்தமான நீரும் கழிவறை வசதியும் இல்லை. தண்ணீரை தங்கத்தைப்போல கையாளவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். பாலுக்கு நிகராக தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறோம்.

Continue reading →

பி.எஃப்: கூடுதல் பலன் அளிக்கும் புதிய நடைமுறைகள்!

ரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 பேர் பணிபுரிந்தாலே அவர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்வது கட்டாயம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அமைப்பு சார்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக பல புதிய மாற்றங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து சென்னை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி எஸ்.சங்கர் ஆகிய இருவரும் விளக்கிச் சொன்னார்கள். 
நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை!

Continue reading →

இணையப் பயனாளர்களில் தமிழ்நாடு முதலிடம்

இந்திய நகரங்களில், அதிக எண்ணிக்கையில், இணையத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சென்ற மார்ச் மாதத்தின் இறுதியில் எடுத்த கணக்கீட்டின்படி, மொத்தம் உள்ள 23.1 கோடி பேரில் 9% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். 2.1 கோடி பேர் தமிழக நகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்ட்ரா, டில்லி மற்றும் கர்நாடகா மாநில நகரங்களில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, முறையே 1.97 கோடி, 1.96 கோடி மற்றும் 1.7 கோடி ஆக இருந்தது.

Continue reading →

சங்கு முத்திரை

ம் கைகளைச் சேர்த்து இந்த முத்திரையை வைத்தால், அதன் தோற்றம் ‘சங்கு’ போலவே தெரியும். உடலில், சங்கு என்பது தொண்டை பகுதியை குறிக்கும். தொண்டை, தொண்டை சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க வல்லது சங்கு முத்திரை.

எப்படிச் செய்வது?

Continue reading →

பதினாறு பேறுகளும் அருளும் பதினாறு கணபதிகள்!

விநாயகப் பெருமானுடைய திருவடிவம் பக்தர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப முப்பத்திரண்டு வகைகளாகப் போற்றப்படுகின்றன.

அவற்றுள் பதினாறு வடிவங்கள், விநாயகரின் ஷோடச வடிவங்கள் என்று போற்றப்படுகின்றன.

இந்த பதினாறு திருவடிவங்களையும் மனதில் தியானித்து, ஒவ்வொரு வடிவத்தின் பெயரையும் ஜபித்து ஆனைமுகனை தினமும் ஆராதித்து வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

ஓம் பக்தி கணபதியே போற்றி!

முழு நிலா போன்ற வெண்ணிற மேனியர். தம்முடைய நான்கு திருக் கரங்களில் தேங்காய், மாம்பழம், வாழைப் பழம், அமிர்த கலசம் (பாயச பாத்திரம் என்றும் சொல்வர்) வைத்திருப்பார்.
இவரை வழிபட்டால், வீட்டில் அன்னம் செழிக்கும்.


ஓம் த்விஜ கணபதியே போற்றி!

நான்கு முகங்களை உடையவர். சந்திரன் போன்று பிரகாசிப்பவர். நான்கு திருக் கரங்களிலும் முறையே சுவடி, அட்ச மாலை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவர். கைகளில் மின்னல் கொடிபோன்ற வளையல்களை உடைய இவரை வழிபட்டால், தீவினைகள் நீங்கும்.


ஓம் திரயட்சர கணபதியே போற்றி!

இவர் பொன்னிற மேனி உடையவர். அசைகின்ற செவிகளை உடையவர். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி இருப்பவர். தும்பிக்கையில் மோதகம் திகழும். இந்தத் திருவுருவை தியானித்து வழிபட, கலைஞானம் ஸித்திக்கும்.


ஓம் ஊர்த்துவ கணபதியே போற்றி!

பொன்னிறம் வாய்ந்தவர்.கரங்களில் நீல மலர், நெற்பயிர், தாமரை, கரும்பு, வில், பாணம், தந்தம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பச்சை நிறத் திருமேனி உடைய தேவியைத் தழுவியவாறு காட்சி தரும் இவரை வழிபட்டால், இல்லறம் நல்லறமாகும்.


ஓம் ஏகதந்த கணபதியே போற்றி!

நீலநிறத் திருமேனியும் பேழை வயிறும் கொண்டவர். கோடரி, அட்சமாலை, லட்டு, தந்தம் ஆகியவற்றை தம்முடைய திருக்கரங்களில் ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால், முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும்.


ஓம் ஏகாட்சர கணபதியே போற்றி!

செந்நிறத் திருமேனி உடையவர். செந்நிறப் பட்டு அணிந்தவர். குறுகிய கால்களும் குறுகிய கைகளும் உடையவர். அபய வரத ஹஸ்தங் களுடன் மேலிரு திருக் கரங்களில் பாசமும் அங்குசமும், தும்பிக்கையில் மாதுளம்பழமும் கொண்டு திருக்காட்சி தருபவர். இவரை வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்.


ஓம் ஹரித்ரா கணபதியே போற்றி!

மஞ்சள் நிறத் திருமேனி உடையவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பக்தர்களுக்கு உடனுக்குடன் அபயம் அளிப்பவர். இவரை வழிபட்டால், நம்மைச் சூழும் பேராபத்துகளும் சூரியனைக் கண்ட பனி போன்று விலகும்.


ஓம் ஹேரம்ப கணபதியே போற்றி!

ஐந்து திருமுகங்கள் கொண்டவர். இரண்டு கரங்களில் அபய- வரத ஹஸ்தமும், மற்ற திருக் கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மலர்க் கொத்து, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும்.


ஓம் லட்சுமி கணபதியே போற்றி!

பாற்கடல் போன்ற வெண்மை நிற மேனி உடையவர். தமது எட்டு திருக்கரங்களிலும் கிளி, மாதுளை, கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம் ஏந்தியும், வரத ஹஸ்தம் காட்டியும் திகழ்வார். மடியில் தேவியரை அமர்த்தியபடி அருளும் இவரை வழிபட்டால், வறுமைகள் நீங்கும்.


ஓம் மகா கணபதியே போற்றி!

முக்கண்ணனாக பிறை சூடி திகழ்பவர். கரங்களில் மாதுளை, கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பல புஷ்பம், நெற்கதிர், தந்தம், ரத்னக் கலசம் ஆகியவற்றுடனும், மடியில் அமர்ந்திருக்கும் தேவியை அணைத்த நிலையிலும் திகழும் இவரை வழிபட, மனச் சலனங்கள் விலகும்.


ஓம் நிருத்த கணபதியே போற்றி!

இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பர். கற்பக விருட்சத்தின் அடியில் எழுந்தருளி இருப்பவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் போன்றவற்றை ஏந்தி இருப்பவர். பொன்னிறத் திருமேனியரான இவரை வழிபட, தீயவை நீங்கி நல்லவை நாடிவரும்.


ஓம் க்ஷிப்ர பிரசாத கணபதியே போற்றீ

பேழை வயிறு உடையவர். ஆபரணங்கள் தரித்த திருமேனி கொண்டவர். பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளை, தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவைத் தியானித்து வழிபட்டால், வாழ்க்கையில் தடைகள் நீங்கும்; நற்காரியங்கள் நடந்தேறும். 


ஓம் சிருஷ்டி கணபதியே போற்றி!

சிவந்த திருமேனியர். பெருச்சாளி வாகனத்தை கொண்டவர். தம்முடைய திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். இவருடைய திருவுருவை மனதில் தியானித்து, அனுதினமும் வழிபட்டு வந்தால், கலை படைப்புகளில் வெற்றி பெறலாம்.


ஓம் விஜய கணபதியே போற்றி!

செந்நிற மேனி கொண்டவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவர், தம் திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிப்பவர். இந்தப் பிள்ளையாரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.


ஓம் தருண கணபதியே போற்றி!

சிவந்த நிறமும், எட்டு திருக்கரங்களும் கொண்டவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தந்தம், நெற்கதிர், கரும்புத் துண்டு ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டால், நம் சந்ததி செழிப்புற்று திகழும்.


ஓம் உச்சிஷ்ட கணபதியே போற்றி !

நீலநிறத் திருமேனியராக, இரண்டு கரங்களில் நீலோற்பல மலரும், மற்ற கரங்களில் மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால்,  மனவாட்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

கணபதியே வருவாய்… அருள்வாய்!

விநாயகர் தனக்குத் தலைவர் தானேயாக விளங்குபவர். அவருக்கு மேல் வேறு தலைவர் இல்லை. தேவர்கள் யாருக்குமே இத்தனை ஆற்றல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அபரிமிதமான ஆற்றல் கொண்டவர் விநாயகர். அகிலம் அனைத்தையும் தனது வயிற்றுக்குள் அடக்கி, வெளியிலிருந்து எந்த இடையூறும் நெருங்காதவாறு காக்கும் கருணைக் கடவுள் கணபதி. எத்தனை படைகள் ஒருசேரத் திரண்டு வந்தாலும், அத்தனை படைகளையும் சம்ஹாரம் செய்து, பக்தர்களைக் காப்பாற்றுபவர் அவர்.
கணங்களுக்கெல்லாம் பதியாக இருப்பவர் கணபதி. பிரகிருதி தத்துவம், சுத்தவித்யா தத்துவம், ஈசுவர தத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் விளங்கும் விநாயகர், பிரகிருதி, தெய்வம், பரஞானம் ஆகிய மூன்று நிலைகளிலும் தோற்றம் தருபவர்.
தூய அன்போடு பூவும் நீரும் கொண்டு அவரை பூஜிக்கும் அன்பர்களுக்கு நிகரற்ற இன்ப வாழ்வை அருள்பவர். தன் அடியவர்களுக்குப் பிற உயிர்களாலும், மற்ற தெய்வங்களாலும், ஏன்… தன்னாலும்கூட எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் காப்பாற்றுபவர்.
யானையைப் போலவே தன்னைக் கட்டுவதற்கு, அன்பாகிய கயிற்றை அடியார்களுக்குத் தானே எடுத்துக் கொடுத்து, அவர்களின் உள்ளமாகிய கூடத்தில், ஊக்கமாகிய கட்டுத்தறியில் கட்டுண்டு நிற்பவர். பாகனின் அன்பான கட்டளைக்கு இணங்கி நடக்கும் யானையைப் போலவே, அடியார்கள் பக்தியுடன் கண்ணீர் மல்கத் துதித்துப் போற்றும் பாடல்களுக்கு வசமாகி, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவர்.
சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்தும் ஐந்து கரங்கள்… என பிரணவ தத்துவமாகவே திகழும் அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தித் திருநாள்.
இந்தப் புண்ணிய தினத்தில் விநாயகரை வழிபடுவதால், நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும்.
வழிபடுவது என்றால், பண்டிகை தினங்களில் ஏதோ சம்பிரதாயமாக தெய்வங்களை வணங்குவதால் பலன் கிட்டாது. குறிப்பிட்ட பண்டிகை உணர்த்தும் தாத்பரியத்தை உணர்ந்து, அந்த பண்டிகைக்கு உரிய தெய்வத்தின் மகிமையை அறிந்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி உளமார வழிபட்டால், அதற்கான பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
அவ்வகையில் விநாயகர் சதுர்த்தியின் மகிமையோடு, பிள்ளையாரின் லீலைகள், பதினாறு பேறுகளையும் பெற்றுத் தரும் அவரின் திருவடிவங்கள், பிள்ளையார் விரதங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.