தினமும் ‘எண்ணெய்’ கவனி!

ண்ணெய் இல்லா சமையலை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என நம்முடைய அன்றாட உணவில், இனிப்புகளில் எண்ணெய் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பல காலமாக நம்முடைய உணவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. நம் ஊர் எண்ணெய் கொழுப்பு நிறைந்தது என்று, கடலை எண்ணெய், சூரியகாந்தி

எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று பல இறக்குமதி எண்ணெய்கள் நம்முடைய சமையல் அறையை ஆக்கிரமித்துவிட்டன. கொழுப்புச்சத்தும் உடலுக்குத் தேவையானதுதான். எதுவும் அளவாக இருக்கும் வரை ஆபத்து இல்லை. எல்லா எண்ணெய்களுமே ‘இதயத்துக்கு இதமானது; ஆரோக்கியத்துக்கு ஏற்றது’ என்றுதான் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
உண்மையில் இந்த எண்ணெய்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்றவைதானா? இந்த எண்ணெய்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? இவற்றின் மருத்துவக் குணங்கள் என்னென்ன?

நல்லெண்ணெய்

நிறைவுற்ற கொழுப்பு அமிலம் குறைவு.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும்.
கால்சியம் நிறைந்துள்ளது. இதனால், பற்கள், எலும்புகளை வலுவூட்டும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

கடலை எண்ணெய்
இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
சருமத்தைப் பாதுகாத்து, இளமையாக இருக்கச் செய்யும்.
தேங்காய் எண்ணெய்
இதயத்துக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க உதவும்.
தைராய்டு சுரப்பதை அதிகரிக்கிறது.
முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
எளிதில் ஜீரணமாகும்.
கடுகு எண்ணெய்
சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
பசியைத் தூண்டுவதோடு, ஜீரணத்துக்கும் உதவுகிறது.
தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. வியர்வை சுரப்பதற்குத் தூண்டுகிறது.
ஆலிவ் எண்ணெய்
இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
சர்க்கரைநோயைத் தடுக்கும்.
அல்சைமர் எனும் ஞாபகமறதி நோயைத் தடுக்கும்.
கெட்டக் கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
சூரியகாந்தி எண்ணெய்
ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னைகள் வராமல் காக்கும்.
இதயத்துக்கு வலுசேர்க்கும்; கொழுப்பைக் குறைக்கும்.
சருமத்துக்கு நன்மை தரும்.
பனை எண்ணெய்
வலிப்பு போன்ற நரம்பு நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடியது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; மூட்டுவலியைத் தடுக்கும்.
வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், பார்வைத் திறனுக்கு மிகவும் நல்லது.
பருத்திக்கொட்டை எண்ணெய்
முகப்பொலிவுக்கு நல்லது என்பதால், சோப்பு தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வைட்டமின் இ அதிகம் உள்ளதால், நீண்ட நாள் வாழ்வதற்கு வழிவகுக்கிறது.
கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice Bran oil)

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு நல்லது.
நல்ல கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளதால், இதயத்துக்கு நன்மை பயக்கும்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ஒட்டும் தன்மை குறைவு என்பதால், இதை அடிக்கடி சமையலில் சேர்த்துவரலாம்.
குசம்பப்பூ எண்ணெய் (Safflower oil)
தசைப்பிடிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய்க்கு முன்பு பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக இருக்கிறது. 

%d bloggers like this: