பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து இணைய இணைப்பு

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வை பி இணைய இணைப்பு தரும் சாதனமாக மாற்றும் வசதி தற்போது கிடைத்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம் மற்றும் அதன் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்பட்ட ஆண்டுவிழா மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டர்

மேற்கொண்டிருந்தால், இது எளிதாகிறது. ஏற்கனவே தரப்பட்டுள்ள விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் இந்த வசதி இருந்தாலும், விண்டோஸ் 10ல் இது மிக எளிதாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்விட்ச் ஒன்றை இயக்கி இதனை மேற்கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் வயர் வழியாகவும், அது இல்லாமலும் இணைய இணைப்பில் இருக்கலாம். இதற்குக் கீழ்க்கண்ட செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. விண்டோஸ் மற்றும் ‘I’ கீ அழுத்தி செட்டிங்ஸ் பிரிவைப் பெறவும். இதனை விண்டோஸ் கீ அழுத்தி அதில் கிடைக்கும் செட்டிங்ஸ் பிரிவில் அழுத்தியும் பெறலாம். இந்த செட்டிங்ஸ் பக்கத்தில் “Network & Internet” என்பதில் அழுத்தவும்.
2. இந்த Network & Internet பக்கத்தில், இடது பிரிவில் உள்ள “Mobile hotspot” என்பதில் கிளிக் செய்திடவும்.
3. வலது பிரிவில், “Share my Internet connection with other devices” என்ற ஸ்விட்ச் அழுத்தி இயக்கவும். மாறா நிலையில் உள்ள நெட்வொர்க் இல்லாமல், வேறு ஒன்றிலிருந்து இணைப்பு வேண்டும் எனில், Edit என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. எடிட் விண்டோவில், நீங்கள் இணைக்க விரும்பும் நெட்வொர்க் பெயரை டைப் செய்து அதற்கான பாஸ்வேர்டையும் கொடுக்கவும். அதன் ஓகே கிளிக் செய்திடவும்.
5. அவ்வளவு தான். விண்டோஸ் 10ல் இவ்வளவு போதும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒரு வை பி ஹாட் ஸ்பாட் ஆக இயங்கும். விண்டோஸ் 10 ஆண்டுவிழா மேம்படுத்தலில் நமக்குத் தரப்பட்ட அருமையான வசதி இது. ஆனால், இது பற்றி மைக்ரோசாப்ட் அவ்வளவாக விளம்பரப்படுத்தவில்லை.

%d bloggers like this: