மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும் பீர்க்கன்காய்

 

பீர்க்கன்காய்…  நீர்ச்சத்து நிறைந்த இந்தக் காயில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்களும் விட்டமின்களும் நிறைந்துள்ளன.

இது, உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, கல்லீரலுக்கு பலமும் தரக்கூடியது.
தோல் நீக்கிய பீர்க்கன்காய் 50 கிராம் அளவுக்கு எடுத்து, அரை ஸ்பூன் சீரகம், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வந்தால், கல்லீரல் பலப்படும். மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும். ஈரல் வீக்கத்தை சரிசெய்வதோடு, பித்தத்தையும் குறைக்கும்.
பீர்க்கன்காயைத் தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி, சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து, பிறகு குளித்தால், இளநரை சரியாகும்.

பீர்க்கன்காய்த் தோலை துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். பீர்க்கன்காய் துவையல் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
பீர்க்கன் இலைகளை மையாக அரைத்து அழுகிய புண்களின்மீது வைத்து கட்டினால் குணமாகும். சரும நோய்க்கும் இதை பூசலாம். இலைச்சாற்றை கரண்டியில் விட்டு சூடாக்கி ஒரு ஸ்பூன் வீதம் குடித்து வந்தால், காலப்போக்கில் நீரிழிவு விட்டு விலகும். பீர்க்கன் வேரை நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து குடித்து வந்தால், சோகை நோய்கள் சரியாவதோடு, கால் வீக்கமும் நீங்கும்.

%d bloggers like this: