டிடிஎஸ் Vs டாக்ஸ் என்ன வித்தியாசம்?
டிடிஎஸ் (TDS -Tax Deducted at Source) மற்றும் இன்கம் டாக்ஸ் (Income Tax) இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை. வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போடும்போது டிடிஎஸ் பிடிக்கமாட்டோம் என்று சொன்னால், அந்த முதலீட்டுக்கு வருமான வரி கிடையாது என பலர் நினைக்கிறார்கள். அந்த முதலீட்டு ஆவணத்தை அலுவலகத்தில் காட்டி, வரி பிடிக்க வேண்டாம் என்று சிலர் சொல்வதும் நடக்கிறது. இன்றைய தேதியில் வருமான வரிச் சலுகை அளிக்கும் முதலீடுகளுக்கு மட்டும்தான் டிடிஎஸ் பிடிக்க மாட்டார்கள். Continue reading →
ஆன்லைன் ரம்மி… இளைஞர்களை குறிவைக்கும் ஹைடெக் ஆபத்து!
இன்றைக்கு பல்வேறு இணையதளங்களில் ஒரு விளம்பரம் நம்மை சுண்டி இழுக்கிறது. “நான் 10,000 ரூபாய் வென்றேன்” என்று பல வகையான ஆட்கள் அந்த விளம்பரத்தில் தோன்றி நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். இணையதளங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் அந்த விளம்பரம் இப்போது அடிக்கடி தென்பட ஆரம்பித்துவிட்டன. அந்த விளம்பரம், ஆன்லைன் ரம்மி.
உங்கள் அலுவலகத்தின் புதிய மேனேஜர்!
ஒரு அலுவலகத்தில் மேனேஜர் என்பவர்தான் முக்கியமானவர். காரணம், அவர்தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வேலைகளையும், இலக்குகளையும் நிர்ணயிப்பவர். பணியாளர்கள் இலக்குகளை நோக்கிதான் பணிபுரிகிறார்களா எனக் கண்காணிப்பவரும் அவர்தான்.
ஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து?
இரவோ, பகலோ, மழையோ, வெயிலோ… எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் வாங்கச் செய்யும் வசீகர வலையாக பரந்து விரிந்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். நேரில் பார்த்து, பல நூறு கேள்விகள் கேட்டு, தொட்டு உணர்ந்து, அதன் பிறகே திருப்தியாகி பணத்தை எடுக்கும் நம் மக்கள் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங்.
விண்டோஸ் 10: காட்டப்படாத வசதிகள்
விண்டோஸ் 7 சிஸ்டம் தொடங்கி, மைக்ரோசாப்ட் வழக்கம் போல் இல்லாமல், பல புதிய வசதிகளைத் தந்து வருகிறது. விண்டோஸ் இயக்கத்தினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், இவற்றை முழுமையாக அறிந்து பயன்படுத்துவதில்லை. தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 10 மற்றும் அதன் அண்மைக் காலத்திய மேம்பாடு,
எந்த நகை… எப்படி வாங்குவது?
விழிப்பு உணர்வு
`தங்கமே ஒன்னத்தான் தேடி வந்தேன் நானே…’ என சுலபமாக பாடுவது போன்ற விஷயம் அல்ல நகை வாங்குவது…
தங்கமோ, வெள்ளியோ… வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?