Daily Archives: செப்ரெம்பர் 19th, 2016

மரம் சொல்லும் சேதி

மரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், நீண்டகாலமாக நிழல் கொடுத்த மரங்களும், வெட்டப்பட்டு வருகின்றன. காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் உழைத்து, களைத்து வீட்டுக்கு செல்லும் போது, அயர்ச்ச்சி ஏற்படுவது வழக்கம்.

Continue reading →

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

கவனம்

 

மிகச்சிறிய நாடு இலங்கை. அங்கு மலேரியா காய்ச்சல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அந்த நாட்டில் மேற்கொண்ட மிகத்தீவிரமான கொசு ஒழிப்பு நடவடிக்கைதான் காரணம். அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொசுவால் பரவும் நோயை ஒழிக்க முடியும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தியை தடுக்க முடியும். அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை, இந்த மாற்றம் மக்கள் மனதில் இருந்தும் வர வேண்டும்.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…

டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, செல்லில் டெக்ஸ்ட் அமைக்கையில், அது தானாக அதனுள்ளாகவே சரி செய்திடும் வகையில் இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி ஒன்று வேர்ட் புரோகிராம் தருகிறது. அதனைப் பார்க்கலாம்.

Continue reading →

வளரும் சிந்தனை

இன்று, “டிவி’ இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். வீட்டு வேலை நடக்க வேண்டும் என்று, “டிவி’யில் நிகழ்ச்சிகளை போட்டு விட்டு, குழந்தைகளை அதன் முன் அமர்த்துவது அதிகரித்துள்ளது. நிகழ்ச்சிகளில் வரும் கொடூர சம்பவங்கள், குழந்தைகளின் மனதில் முரட்டு தனத்தை ஏற்படுத்துகிறது என்கிறது, ஒரு ஆய்வு.
வாரத்துக்கு சராசரியாக, 20 மணி நேரம், ஒரு குழந்தை “டிவி’யில்

Continue reading →

மிஸ்டர் கழுகு : காவிரி… ஜெயலலிதா… கள்ள மெளனம்!

ழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப்  புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார்.

Continue reading →

புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை!-விகடன்

நத்தம் செய்த குத்தம்

புளி வியாபாரத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வரை உயர்ந்தவர் நத்தம் விசுவநாதன். கடந்த அ.தி.மு.க. அமைச்சரவையில் மூன்றாவது இடம் என புகழின் உச்சிக்கு போனார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசுவநாதன் முதல்முறை அமைச்சராகி 22 நாட்களில் பதவியை பறிகொடுத்தார். அன்றைய தினம் சென்னையில் ஒரு ஹோட்டலில் அமர்ந்துக்கொண்டு, ‘‘அடுத்து என்னச் செய்ய, 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறதே’’ என, தனது மனைவி மற்றும் தம்பியிடம் புலம்பித் தீர்த்த விசுவநாதனின் சொத்து மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் உயர்ந்தது. தனது பூர்வீக சொத்தாக 13 ஏக்கர் நிலம் மட்டுமே பாகப்பிரிவினையில் கிடைத்தது. ஆனால், இன்றைக்கு எங்கோ உயர்ந்திருக்கிறார். இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது? புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை இது!

Continue reading →