வேர்ட் டிப்ஸ்..டேபிள் செல்லில் டெக்ஸ்ட்:

டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும்

வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, செல்லில் டெக்ஸ்ட் அமைக்கையில், அது தானாக அதனுள்ளாகவே சரி செய்திடும் வகையில் இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி ஒன்று வேர்ட் புரோகிராம் தருகிறது. அதனைப் பார்க்கலாம்.
1. நீங்கள் சற்று மாற்றி அமைக்க வேண்டிய நெட்டு வரிசை அல்லது வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இது நீங்கள் மேலே 1ல் சொல்லப்பட்ட செயலை மேற்கொண்டால் தான் கிடைக்கும்.
3. அடுத்து டேபிள் குரூப்பில் Properties டூல் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Cell டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இனி Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Cell Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. அடுத்து Fit Text என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
7. தொடர்ந்து இருமுறை ஓகே கிளிக் செய்திடவும். முதலில் Cell Options, அடுத்து Table Properties டயலாக் பாக்ஸ் மூடப்படும்.
இங்கு வேர்ட் எப்படி செயல்படுகிறது? செல்லில் உள்ள சொல்லின் எழுத்தளவைக் குறைத்துக் கொண்டு ஏற்கனவே வடிவமைத்த கட்டத்திற்குள்ளாக அமைக்கிறது. வேர்ட் டெக்ஸ்ட்டின் அகலத்தைக் குறைத்துக் கொள்கிறது. இதனை தொழில் நுட்ப ரீதியாக “scrunching” என்று சொல்வார்கள்.
இலக்கண, சொற்பிழை காட்டாதே: வேர்ட் புரோகிராமில், நாம் டெக்ஸ்ட் டைப் செய்திடும்போதே, அதில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்கையில், இதனால், பிழை உள்ள சொற்களின் கீழாக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நெளிவான கோடுகள் காட்டப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது எரிச்சலைத் தரும். மேலும், தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்கையில், அவற்றை ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அநேகமாக, பெரும்பாலான சொற்களில் இந்தக் கோடுகள் காட்டப்படும். எனவே, தமிழில் டைப் செய்து டெக்ஸ்ட் அமைப்பவர்களுக்கு, இந்த கோடுகள் அர்த்தமற்றவையாக இருக்கும். இந்த கோடுகள் காட்டப்படுவதை, வேர்ட் செயலி காட்டாமல் இருக்கும்படி அமைத்திடலாம். அதற்குக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் File டேப்பினை அழுத்தி, பின்னர் Options கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. Mark Grammar Errors As You Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, சொல் மற்றும் இலக்கண பிழைகள் சுட்டிக் காட்டப்பட மாட்டாது.

%d bloggers like this: