வலி நிர்வாகத் துறை

வலி நிர்வாகத் துறை என்பது என்ன?
வலியையும், அதற்கான காரணத்தையும் கண்டறிந்து குணப்படுத்தும் முறை தான், வலி நிர்வாகத் துறை.

வலி எதனால் வருகிறது?

வலி என்பது நோயின் அறிகுறி. வலி நிவாரணி, ஸ்டீராய்டு ஊசிகள் மூலம் வலியை நிறுத்துவது தவறானது.என்னென்ன வலிகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்?

எந்த வயதினருக்கும் வரும் மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு தண்டுவடத்தில் வரக்கூடிய டிஸ்க் ஸ்லிப், டிஸ்க் புரலாப்ஸ் உள்ளிட்ட அனைத்து வலிகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது.

வலிகள் வருவதற்கான அடிப்படை காரணம் என்ன?
தற்பொழுது உள்ள உணவுப் பழக்கம், வேலைப்பளு, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம், சரியான நிலையில் உட்காராதது, படுப்பது போன்றவையே
பல்வேறு வலிகளுக்கும் அடிப்படையான காரணங்கள். வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் இளம் வயதினரைக் கூட முழங்கால் வலி பாதிக்கிறது.

சரவாங்கி எனப்படும், Rhuemationd ஆர்த்தரடிஸ்சால் ஏற்படும் வலிக்கும் தீர்வு உள்ளதா?

இந்த பிரச்னை இருப்பவர்கள், குளிர் அல்லது மலைப் பிரதேசத்தில் இருந்தால் அவர்கள் படும் வேதனை மிக அதிகம். மூட்டுகளிடையே வீக்கம் ஏற்பட்டு வலி அதிகமாகும்; இந்த வலியையும் சரி செய்ய முடியும்.
காரணமே இல்லாமல் ஏற்படும் வலிகளுக்கும் நிவாரணம் உண்டா?
பைப்ரோ மையால்ஜியா என்ற பெண்களை அதிகம் தாக்கும் நோய் வருவதற்கான காரணத்தை கண்டறிய முடியாது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், உடல் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மூலம் கூட என்ன பிரச்னை என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்கள் சொல்வதை நம்புவதில்லை; இதனால், மனதளவிலும் பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்னைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்.
தலைவலி போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு?
தலைவலி வருவதற்கு, பல காரணங்கள் உண்டு. அதில், பல் பிரச்னை, கண்களில் கோளாறு, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் பிரச்னை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற பிரச்னையால் ஏற்படும் தலைவலிக்கு, Lolox ஊசியை பயன்படுத்துகிறோம்.

வேறு என்ன பிரச்னைகளுக்கு இந்த முறையில் தீர்வு உள்ளது?

முதுகு தண்டுவடப் பிரச்னை, கேன்சர், வயதானவர்களை அதிகம் பாதிக்கும் பெரி ஆர்த்ரடீஸ், பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரடீஸ், கழுத்து எலும்புத் தேய்மானம், நாட்பட்ட தோள்பட்டை வலிக்கு, பிளட் லெட் ரிச் பிளாஸ்மா என்ற சிறப்பு சிகிச்சை நல்ல தீர்வு.

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிகளுக்கும் சிகிச்சை உள்ளதா?

குழந்தைகளுக்கு ஏற்படும் செரிபிரல் பேலசி, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் வலிகள், டிரைஜெமினல் நியூரால்ஜியா என்று அனைத்து
வலிகளுக்கும் நிவாரணம் உள்ளது.

என்னென்ன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன?
முழங்கால் வலிக்கு ஓசோன் தெரபி, பிளேட்லெட் ரீப்பிளேஸ்மென்ட் பிளாஸ்மா தெரபி, ரேடியோ பிரீகொன்சி அப்லேஷன், நவீன போட்டோ தெரபி மூலம் தீர்வு உள்ளது. 3வது, 4வது நிலையில், கேன்சர் நோயை குணப்படுத்த முடியாமல் போனாலும், வாழும் காலம் வரை வலியின்றி வாழ்வதற்கு, Ganglion Block என்ற சிகிச்சை முறை, முதுகு தண்டுவட பிரச்னையால் கால்கள் மரத்துப் போகும் போது ஹைட்ரோசிசன், எண்டோஸ்கோபிக் டிஸ்க்டெக்டமி உட்பட பல சிகிச்சை முறைகள் உள்ளன.

%d bloggers like this: