இதய நோய்கள் ஆண் VS பெண்

யிரைப் பறிக்கும் தொற்றா நோய்களில் இதய நோய்கள்தான் நம்பர் ஒன் கில்லராக இருக்கின்றன. ஆண், பெண் இருவருக்குமே வயது வித்தியாசம் இன்றி இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரம்ப அறிகுறிகளை அறிந்தால், நம்மால் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும் மாரடைப்பின் வெவ்வேறான அறிகுறிகளை அறிந்துகொள்வோம்…

​​அறிகுறிகள்


இதய ரத்த நாளங்களில் ஆண், பெண் இருவருக்குமே அடைப்புகள் ஏற்படும். ஆனால், ஆண்களுக்கு முழுமையான அடைப்பும், பெண்களுக்குப் பகுதியளவு அடைப்பு ஏற்படும்.

*ஆண்களுக்கு ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து ரத்த உறைவை ஏற்படுத்துவதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இதய நோய் ஏற்படுகிறது. இதை, ‘கிளாசிக்’ பிளாக்கேஜ்’ என்பார்கள்.
*பெண்களுக்கு ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்தாலும் அவை கரைந்துகொண்டே இருப்பதால், சிறுசிறு ரத்த உறைதல்கள் ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படுகிறது.

மாரடைப்பு ஏற்படும் பெண்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் நெஞ்சு வலியை உணர்வதே இல்லை.

%d bloggers like this: