தேன் உன்னும் அருமருந்து!

மிழர்களுடைய மரபு சார்ந்த உணவுகளில் தேனுக்கு அதிமுக்கியத்துவம் உண்டு. அத்தகைய தேன், உடல் அழகை மெருகேற்றுவதற்குப் பலவகைகளில் உதவுகிறது.

முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும்.

வடுக்கள்:
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேன் தடவும்போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும்.

ஈரப்பதம்: தேனை முகத்தில் தடவி ஊறவைத்து ஃபேஷியல் செய்யும்போது, முகத்தின் வறட்சியை நீக்கி, பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை உண்டாக்கும்.

மூப்படையாமல் இருக்க: இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ஊறவைத்து, முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உதடு: சர்க்கரையும் தேன்துளிகளும் கலந்த எலுமிச்சைச் சாற்றை உதட்டில் தடவி, 5 நிமிடங்கள் ஊறவைத்தால், வறண்ட உதட்டுப் பகுதி மென்மை அடையும்.

நக கண்டிஷனர்: 
தலா ஒரு டீஸ்பூன் தேன், வினிகர் எடுத்து கலந்து, நகம் மற்றும் நக இடுக்குகளிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவிவந்தால், நகங்கள் வலிமையும் மென்மையும் பெறும்.

ஷேவிங்: ஷேவிங் செய்த பின்பு, முகத்தில் தோன்றும் புடைப்புகள் மற்றும் கொப்புளங்களிலிருந்து தப்பிக்க, தேன் தடவலாம். அவை எளிதில் சரியாகும்.

கருவளையம்:
கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தைச் சரிசெய்ய, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு டீஸ்பூன் தேனைக் கண்களைச்சுற்றி தடவி, 20  நிமிடம் ஊறவைத்துக் கழுவினால் போதும்.

படை: உடலில் தோன்றும் படையையும் , நாள்பட்ட தோல் ஒவ்வாமையையும் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சில நாட்களில் சரியாகிவிடும்.

குறிப்பு:
கலப்படமில்லாத, சுத்தமான தேனாக இருந்தால் மட்டுமே பலன்கள் தெரியும்.

%d bloggers like this: