Daily Archives: ஒக்ரோபர் 18th, 2016

மிஸ்டர் கழுகு : ராஜாத்தி சொன்ன யோசனை!-விகடன்

ப்போலோ விசிட் முடித்து அலுவலகம் வந்த கழுகாரிடம் மணமணக்கும் ஏலக்காய் டீயை நீட்டினோம். சூடான டீயை உறிஞ்சியவாறே, கொண்டுவந்த தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அப்போலோ மருத்துவமனை அரசியல்வாதிகள் ‘அட்டென்டன்ஸ்’ போடும் இடமாக மாறிவிட்டது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்போலோ வந்ததுதான் அரசியல் அரங்கில் பரபரப்பு பேச்சாக அடிபடுகிறது.’’

Continue reading →

தேங்காய் எண்ணெயின் 8 பலன்கள்!

தேங்காய் எண்ணெய், நம் பண்பாட்டின் அடையாளம். உடலுக்கு உள்ளும் வெளியிலும் செயல்படும் ஃபங்ஷனல் ஃபுட்களில் தேங்காய் எண்ணெய் முக்கியமானது. தேங்காய் எண்ணெயின் நற்பலன்கள் இதோ…

தலைமுடியைப் பராமரிக்க Continue reading →

மிஸ்டு கால் கொடுங்க… பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க!

 

ங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.

Continue reading →

கேண்டி க்ரஷ் சாகா – லெவல் 2000

கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டின் லெவல் 2000 ஐ, அண்மையில், இதனைத் தயாரித்து வழங்கும் ‘கிங்’ நிறுவனம் வெளியிட்டது. விண்டோஸ் 10 இயக்கத்தில் விளையாடும் வகையில் இது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 29ல் வெளியிடப்பட்ட இந்த நிலையை, ஒரு வாரம் வரை நேரடியாக விளையாடும் வகையில் வழங்கப்பட்டது. அதாவது, 1999 ஆவது நிலையை அடையாமலேயே, ஆர்வலர்கள், 2000 ஆவது நிலையை விளையாடலாம். தற்போது வழக்கமான விளையாட்டுடன் இது கிடைக்கிறது. கேம் ஒன்றில், அதன் நிலை 2000 வரை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது அரிதான ஓர் இலக்குதான்.

Continue reading →

Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!

தவிர்க்க… தப்பிக்க..

.அக்டோபர் – மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்

 

பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘இது நமக்கெல்லாம் வராது’ என்று நினைக்கும் பெண்களின் அறியாமையே, இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

ஏன் ஏற்படுகிறது?

மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம்.  பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.

 

யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது?

Continue reading →